‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!

0
'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!
'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!
‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக துபாய் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் உடல்நலம் தேறி செவிலியர்களுடன் படம் பார்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயகாந்த்:

தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்கள் உள்ளனர். வயதான காரணத்தால் இவருக்கு சில காலமாக உடல்நல கோளாறு ஏற்பட்டு வருகிறது. அதற்காக அவர் பல முறை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார்.

வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த ‘பாரதி கண்ணம்மா’ நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!

கடந்த 2019 ஆம் ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல்பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துபாய் சென்றார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள் !!

இந்நிலையில் உடல்நலம் தேறிய அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். என குறிப்பிட்டு அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். விஜயகாந்துக்கு சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இந்தநிலையில் விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!