TVS நிறுவன பைக்குகளின் விலை ரூ.700 முதல் ரூ.5,000 வரை உயர்வு – முழு விவரம் இதோ!

0
TVS நிறுவன பைக்குகளின் விலை ரூ.700 முதல் ரூ.5,000 வரை உயர்வு - முழு விவரம் இதோ!
TVS நிறுவன பைக்குகளின் விலை ரூ.700 முதல் ரூ.5,000 வரை உயர்வு - முழு விவரம் இதோ!
TVS நிறுவன பைக்குகளின் விலை ரூ.700 முதல் ரூ.5,000 வரை உயர்வு – முழு விவரம் இதோ!

TVS மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்பான அப்பாச்சி உள்ளிட்ட சில ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உயர்த்தப்பட்ட மற்ற வாகன உற்பத்தியாளர்களுடன், TVS வாகனங்களின் மாடல்களும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

விலை உயர்வு

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான TVS தனது தயாரிப்பு மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் TVS தயாரிப்பான அப்பாச்சி உள்ளிட்ட சில இரு சக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் உயர்வுக்கான காரணத்தை கேட்டபோது, கிட்டத்தட்ட அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் கொடுத்த அதே பதிலை TVS நிறுவனமும் கொடுத்துள்ளது. அந்த வகையில் உள்ளீட்டு செலவு அதிகரிப்பு மூலம் வாகன விலை ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலவச சமையல் எரிவாயு பெற விண்ணப்பிப்பது எப்படி? உஜ்வாலா 2.0 திட்டம் துவக்கம்!

அதாவது உற்பத்தி ஆட்டோ மொபைல்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமான வித்தியாசத்தில் உயர்ந்துள்ளது. TVS மோட்டார் நிறுவனம் மக்களின் நல்லாதரவை பெற்ற இந்தியாவின் தலைசிறந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். அதன் தயாரிப்புகள் அனைத்தும் எப்போதும் முதலிடத்தில் இருந்து வருவது முக்கியமானதாகும். இப்போது, பிராண்ட் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் TVS மோட்டார் நிறுவனமும் தனது தயாரிப்பின் விலையை உயர்த்தக் கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் TVS மாடல் மற்றும் வேரியண்ட்டை பொறுத்து, தனது வாகனங்களின் விலையை ரூ.5,000 வரை உயர்த்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் கீழ் இரு சக்கர வாகன வரிசையில் குறைந்த விலை உயர்வை TVS ஜூபிடர் பெற்றுள்ளது. ஸ்டாண்டர்ட் வேரியன்ட் விலை ரூ .736 அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜூபிடரின் ZX வேரியன்ட் வகை ரூ.2,336 க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அப்பாச்சி வரிசையில், மிகக் குறைந்த விலை உயர்வை அப்பாச்சி RDR 160 பெற்றது. அதாவது இவ்வகை மாடல் விலை ரூ.3,000 உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக அப்பாச்சி RR 310 மாடல் ரூ.5000 வரை விலை உயர்வு அடைந்துள்ளது. தவிர ரூ.700 முதல் ரூ.5,000 வரையுள்ள விலை உயர்வு பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், இந்த சிறிய வேறுபாடுகள் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அந்த நேரத்தில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!