கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சேர்த்து பிரம்மாண்ட வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம் – குவியும் வாழ்த்துகள்!

0
கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சேர்த்து பிரம்மாண்ட வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம் - குவியும் வாழ்த்துகள்!
கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சேர்த்து பிரம்மாண்ட வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம் - குவியும் வாழ்த்துகள்!
கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சேர்த்து பிரம்மாண்ட வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம் – குவியும் வாழ்த்துகள்!

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக சாமானிய மக்களாக இருந்து பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஜோடி தான் செந்தில் ராஜலக்ஷ்மி. அவர்கள் பிரமாண்டமாக கனவு இல்லம் ஒன்றை கட்டி இருக்கின்றனர். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

செந்தில்- ராஜலக்ஷ்மி தம்பதி

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சந்தானம் என பிரபலமானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் ஒருவர் தான் செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதி. நாட்டுப்புற பாடகர்களாக இருந்த இவர்களுக்கு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் சினிமா வாய்ப்பை வாங்கி கொடுத்தது.

அதன் பின் பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர்கள் குரலில் கேட்டிருப்போம். இந்நிலையில் செந்தில் ராஜலக்ஷ்மி இணைந்து அவர்களின் சொந்த ஊரில் பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி இருக்கின்றனர். அதன் புதுமனை புகுவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இயக்குனர் ரவூஃபா அவர்களால் தான், இந்த நிலைமைக்கு செந்தில் ராஜலக்ஷ்மி வந்திருப்பதால் அவர் புது வீட்டில் விளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.

தகுந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் டிவி.. கொஞ்சம் யோசிக்கலைனா Total Close தான்!!

Exams Daily Mobile App Download

அது குறித்த வீடியோ ஒன்றை செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடி தனது யூடுயூப் சேனலில் பகிர்ந்து இருக்கின்றனர். அதில் இஸ்லாமியரான ரவூஃபா மேடம் அத்தனை சாமி படங்களுக்கு நடுவே விளக்கு ஏற்றுவது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாராட்டுகளை பெற்றது. இந்த தம்பதி மேலும் வளர வேண்டும் என அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!