தமிழகத்தில் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – TTDC முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - TTDC முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - TTDC முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – TTDC முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மூலம் திருப்பதிக்கு தினசரி சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாற்றம் ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய அறிவிப்பு:

இந்தியாவின் புனிதத் தலங்களில் முக்கியமான தளமாக திருமலை திருப்பதி உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இருந்து அதிகமான பக்தர்கள் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் (TTDC) சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பக்தர்கள் திருப்பதிக்கு செல்ல உள்ள தேதிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னரே பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை TTDC யில் தற்போது உள்ளது.இந்த நிலையில், திருப்பதிக்கு வருகைதரும் வெளிமாநில பக்தர்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறித்த விவரங்கள், அவர்கள் பயணம் மேற்கொள்ளும் நாட்களுக்கு 7 நாட்களுக்கு முன்பே, தங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கதிர் முல்லையை வீட்டிற்கு அழைக்கும் முருகன், காலில் விழுந்து கெஞ்சிய கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்த அறிவிப்பு வரும் 15 ஆம் தேதியில் இருந்து (ஜூன் 15) அமலுக்கு வருவதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது இதை கருத்தில் கொண்டு, TTDC மூலம் திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், தங்களது பயணத்தை இனி 7 நாட்களுக்கு முன் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் 15 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044 -2533 3333, 044 -2533 3444, 180042531111 ஆகிய எண்களை கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!