தமிழகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது – கூட்டமைப்பு தலைவர் விளக்கம்!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது - கூட்டமைப்பு தலைவர் விளக்கம்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது - கூட்டமைப்பு தலைவர் விளக்கம்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது – கூட்டமைப்பு தலைவர் விளக்கம்!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், மணல் லாரிகள் ஓடாது என கூட்டமைப்பு தலைவர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகள் நிறுத்தம்:

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என M-sand மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் மணல் லாரி ஓடாதது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் லாரிகளில் ஓவர் லோடு ஏற்றுவதை தவிர்ப்பதற்காகவே அனைத்து மணல் லாரி உரிமையாளர்களும் சேர்ந்து இத்தகைய முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பலரும் லாரிகளில் ஓவர் லோடு ஏற்றும் படி கட்டாயப்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த அதிக லோடு ஏற்றுவதற்கு ரூ.5000 முதல் மாமூலும் வசூல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஓவர் லோடினால் விபத்துக்குள்ளான 114 லாரிகள் தற்போது வரைக்கும் இயங்காமலேயே இருக்கின்றன. இதே நேரத்தில் விபத்துக்குள்ளான லாரி மற்றும் ஓட்டுனருக்கான இழப்பீட்டை தர காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. இதனாலே, மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் லாரிகள் ஓடக்கூடாது என்கிற முடிவெடுக்கப்பட்டது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் தமிழக அரசின் தடையை மீறியும் எம் சாண்ட் மற்றும் ஆற்று மணலை அங்கீகரிக்கப்படாத குவாரிகளில் இருந்து சுரண்டி விற்று கொண்டிருக்கின்றன. இது போல ஆற்று மணலை திருடுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் லாரி உரிமையாளர் சங்கத்திற்கும் லோடு கிடைக்காமல் அவதிக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆற்று மணலை திருடும் முறைகேடுகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here