TRP ரேட்டிங்கில் புதிய சாதனை நிகழ்த்திய சன் டிவி ‘கயல்’ சீரியல் – வெற்றிக் களிப்பில் குழுவினர்! ரசிகர்கள் வாழ்த்து!

0
TRP ரேட்டிங்கில் புதிய சாதனை நிகழ்த்திய சன் டிவி 'கயல்' சீரியல் - வெற்றிக் களிப்பில் குழுவினர்! ரசிகர்கள் வாழ்த்து!
TRP ரேட்டிங்கில் புதிய சாதனை நிகழ்த்திய சன் டிவி 'கயல்' சீரியல் - வெற்றிக் களிப்பில் குழுவினர்! ரசிகர்கள் வாழ்த்து!
TRP ரேட்டிங்கில் புதிய சாதனை நிகழ்த்திய சன் டிவி ‘கயல்’ சீரியல் – வெற்றிக் களிப்பில் குழுவினர்! ரசிகர்கள் வாழ்த்து!

சன் தொலைக்காட்சியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ என்ற புத்தம் புதிய சீரியல் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து TRP ரேட்டிங்கில் 10.66 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது.

கயல் சீரியல்

இப்போதெல்லாம் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் புதிய சீரியல்களுக்கு மக்கள் அதிகளவு வரவேற்புகளை கொடுத்து வருகின்றனர். பொதுவாக ஒவ்வொரு டிவி சேனலிலும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தான் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடங்களை பிடித்து வருகிறது. அதே நேரத்தில் சீரியல்களுக்கு பெயர் போன சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் ஆகிய சேனல்களுக்கு இடையே TRP ரேட்டிங்கான போட்டி காணப்படுவது உண்டு.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இசைவாணி வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

அந்த வகையில் போட்டி போட்டுகொண்டு ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களுக்கு மத்தியில், ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள்ளேயே எக்கச்சக்க பார்வையாளர்களை கவர்ந்து மற்ற சீரியல்களுக்கு போட்டியாகி இருக்கிறது சன் டிவியின் ‘கயல்’ சீரியல். அதாவது, சன் டிவியில் தினசரி இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்படும் ‘கயல்’ சீரியல் மிகவும் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனங்களை கவர்ந்து TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த ‘கயல்’ சீரியல், அப்பாவை இழந்த ஒரு குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் மூத்த பெண்ணை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது. இதில் நர்ஸாக வரும் கயல் கதாப்பாத்திரத்தில் ஜீ தமிழின் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக எழில் என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘ராஜா ராணி’ புகழ் நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகா சங்கமத்துடன் இணையும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியான இந்த ‘கயல்’ சீரியல், TRP ரேட்டிங்கில் சுமார் 10.66 புள்ளிகளைப் பெற்று சன் டிவியின் ‘ரோஜா’, ‘சுந்தரி’ போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை முந்தி இருக்கிறது. இந்த எதிர்பாராத வெற்றி சீரியல் குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ‘கயல்’ சீரியலை தொடர்ந்து ‘சுந்தரி’ சீரியல் 9.97 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ‘வானத்தைப்போல’ சீரியல் 9.80 புள்ளிகளை பெற்று 3வது இடத்தையும் வகிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!