பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – இந்த வார TRP ரேட்டிங்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா - இந்த வார TRP ரேட்டிங்!
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா - இந்த வார TRP ரேட்டிங்!
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – இந்த வார TRP ரேட்டிங்!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்பட்டு மக்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இந்த வார TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த இடத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இடம்பெற்றுள்ளது.

சீரியல் ரேட்டிங்

சின்னத்திரை தொடர்களில் அதிகளவு ரசிகர்களை பெற்றுள்ள ஒரு முக்கியமான தொலைக்காட்சி விஜய் ஆகும். இதில் ஒளிபரப்பப்படும் சீரியல் ஆகட்டும், நிகழ்ச்சிகள் ஆகட்டும் அதற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு ஏராளம். சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் சில முக்கியமான கட்டங்களை எட்டியுள்ளது. அந்த வகையில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி 2’ சீரியலில், சந்தியாவை புரிந்து கொண்டு மனம் திருந்திய பார்வதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது.

வலிமை அப்டேட் – நடிகர் அஜித் உடன் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!

மறுபக்கத்தில் சந்தியா விரும்பும் வாழ்க்கையை கொடுக்க நினைக்கும் சரவணன் அவருக்கு விவாகரத்து கொடுக்கிறார். எதிர்பாராத இந்த நிகழ்வால் சந்தியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில், தமிழிடம் காதலை சொல்ல வரும் சரஸ்வதி, அவருக்கு பெண் பார்த்திருப்பதை அறிந்து வருத்தம் அடைகிறார். ஆனால் தமிழுக்கு நிச்சயம் செய்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இந்த வாரத்தில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை பொருத்தளவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சுகமடைந்து வீட்டுக்கு வருகிறார்.

மறுபுறத்தில், மீனாவின் கோரிக்கையை ஏற்று கண்ணனுக்கு வேலை தருகிறார் ஜனார்த்தனன். ‘பாக்கியலட்சுமி’ தொடரில், இனியாவின் பள்ளியில் நடைபெறும் அன்னையர் தின விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியலட்சுமி, போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அசத்துகிறார். ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், பாரதி, வெண்பாவை திருமணம் செய்யவில்லை என்ற உண்மையை சீமந்த விழாவில் அஞ்சலி தெரியப்படுத்துகிறார். கண்ணம்மா, தனது 2 ஆவது குழந்தையை தேடும் பணியில் இறங்கியுள்ளார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இப்படி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த வார எபிசோடுகளில் மக்களின் மனம் கவர்ந்து TRP ரேட்டிங்கில் 13.0 பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா தொடர். அதையடுத்து, பாக்கியலட்சுமி தொடர் 11.8 ரேட்டிங் பெற்று 2 ஆம் இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 11.7 ரேட்டிங் பெற்று 3 ஆம் இடத்திலும், ராஜா ராணி 2 சீரியல் 10.9 ரேட்டிங் பெற்று 4 ஆம் இடத்திலும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் 7.9 ரேட்டிங் பெற்று 5 ஆவது இடத்தையும் வகித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!