பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலிடம் – 38வது வார TRP ரேட்டிங்!

0
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதலிடம் - 38வது வார TRP ரேட்டிங்!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதலிடம் - 38வது வார TRP ரேட்டிங்!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலிடம் – 38வது வார TRP ரேட்டிங்!

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் இந்த ஆண்டிற்கான 38வது வார TRP ரேட்டிங் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரத்தை போல இந்த வாரமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதலிடத்தில் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அனைத்து சீரியல்களும் TRPயில் முன்னிலை பெற போட்டி போட்டுக் கொண்டு கதைக்களத்தை மாற்றி வருகிறது. அதனால் மக்கள் ஆர்வத்துடன் சீரியல்களை பார்த்து வருகின்றனர். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தான் சீரியல்கள் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க வைத்த பெருமை விஜய் டிவியை சேரும்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் குடும்ப புகைப்படம் – இணையத்தில் வைரல்!

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 38வது வார TRP வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரம் போல இந்த வாரமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 12.8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. லட்சுமி அம்மா இறப்பு காட்சிகள் மக்களிடம் ஆர்வத்தை தூண்டி, பார்வையாளர்களை அதிகளவில் பெற்றதால் இந்த சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மேலும் இரண்டாவது இடத்தில் 11.7 புள்ளிகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த இரண்டு சீரியலுக்கும் இடையே தொடர்ந்து முதலிடத்தை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது.

பாரதி, கண்ணம்மாவின் இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதே போல மூன்றாம் இடத்தில் 11.0 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. நான்காம் இடத்தில் ராஜா ராணி 2 சீரியல் இருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ஐந்தாம் இடத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருக்கிறது. ஏழாம் இடத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருக்கிறது. கடைசி இடத்தில் தேன்மொழி பிஏ சீரியல் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!