பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் – TRP ரேட்டிங் வெளியீடு!

0
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் - TRP ரேட்டிங் வெளியீடு!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் - TRP ரேட்டிங் வெளியீடு!
பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் – TRP ரேட்டிங் வெளியீடு!

விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், 37வது வார TRPயில் பாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. லட்சுமி அம்மா மறைவு காட்சிகளே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

TRP ரேட்டிங்:

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் மட்டுமே TRPயில் முன்னிலையில் இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் தான் போட்டி நிலவி வருகிறது. கடந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் இருந்தது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் லட்சுமி அம்மா இறப்பிற்கு கண்ணன் வருவானா என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் TRPயில் யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவிற்கு குவியும் பாராட்டுகள் – ஜீவா இன்ஸ்டா பதிவு!

அதன் படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 13.2 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், புதிய மாற்றமாக ராஜா ராணி 2 சீரியல் 12.2 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், 12.1 புள்ளிகள் பெற்று பாக்கியலட்சுமி சீரியல் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. எப்போதும் முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 11.3 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. பின் ஐந்தாவது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருக்கிறது. ஆறாவது இடத்தில் மௌன ராகம் சீரியல் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ‘பாக்கியலட்சுமி’ நடிகை? ஆனந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேலும் வழக்கம் போல தேன்மொழி பிஏ சீரியல் கடைசி இடத்தில் 2.7 புள்ளிகளுடன் இருக்கிறது. எப்போதும் இருக்காத வகையில் இந்த வாரம் சீரியல் TRPகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பு வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த வருடம் தொடங்கப்பட்டு இது 37வது வார TRP ரேட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!