விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ‘கயல்’ – TRP ரேங்கிங் லிஸ்ட்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் 'கயல்' - TRP ரேங்கிங் லிஸ்ட்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் 'கயல்' - TRP ரேங்கிங் லிஸ்ட்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ‘கயல்’ – TRP ரேங்கிங் லிஸ்ட்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இந்த ஆண்டிற்கான 46வது வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சன் டிவி கயல் சீரியல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

TRP பட்டியல்:

தமிழில் வெளிவரும் சினிமாவை விட சீரியல்களுக்கே ரசிகர்கள் ஏராளம். அதற்கு முக்கியமான காரணம் சீரியல்கள் அன்றாட பொழுது போக்கில் முக்கிய அம்சமாக மாறியது தான். மேலும் சினிமாவில் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் ஆனால் சீரியல்கள் அப்படி இல்லை வாராவாரம் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க பல திருப்பங்கள் கொண்டுவர வேண்டி இருக்கிறது. மக்கள் சீரியல்களை எந்த அளவிற்கு ரசித்து பார்க்கிறார்களோ அந்த அளவிற்கு தான் TRP ரேட்டிங் இருக்கிறது.

ஆதித்யா டிவி அகல்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் – குவியும் வாழ்த்துக்கள்!

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 46வது வாரத்திற்கான TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் ப்ரைம் டைம் சீரியல்களில் சன் டிவி கயல் சீரியல் 10.33 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக சன் டிவி வானத்தை போல சீரியல் 10.18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் சுந்தரி சீரியல் 9.97 புள்ளிகளுடன் இருக்கிறது. நான்காவது இடத்தில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் 9.26 புள்ளிகளுடன் இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் சன் டிவி ரோஜா சீரியல் 8.83 புள்ளிகளுடன் இருக்கிறது.

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆறாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 8.81 புள்ளிகளுடன் இருக்கிறது. ஏழாவது இடத்தில் அபியும் நானும் சீரியல் 8.68 புள்ளிகளுடன் இருக்கிறது. எட்டாவது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் சீரியல் 8.22 புள்ளிகளுடன் இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் கண்ணான கண்ணே சீரியல் 7.94 புள்ளிகளுடன் இருக்கிறது. பத்தாவது இடத்தில் ராஜா ராணி 2 சீரியல் 7.19 புள்ளிகளுடன் இருக்கிறது. பதினோராம் இடத்தில் அன்பே வா சீரியல் 6.84 புள்ளிகளுடன் இருக்கிறது. பன்னிரண்டாம் இடத்தில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் 5 புள்ளிகளுடன் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!