‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை ஏமாற்றிய ரோஷினி – சரியும் TRP! வினுஷா காப்பாற்றுவாரா?

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களை ஏமாற்றிய ரோஷினி - சரியும் TRP! வினுஷா காப்பாற்றுவாரா?
'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களை ஏமாற்றிய ரோஷினி - சரியும் TRP! வினுஷா காப்பாற்றுவாரா?
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை ஏமாற்றிய ரோஷினி – சரியும் TRP! வினுஷா காப்பாற்றுவாரா?

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகியதை அடுத்து TRPயில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ரோஷினி ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த வாரம் முதல் TRPயில் முதல் 5 இடங்களில் இந்த சீரியல் இருந்தது. ஆனால் சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் 2 ஆண்டுகளாக நடித்து வந்த ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலக இருப்பதாக கடந்த மாதம் அறிவித்தார். இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கண்ணம்மா சீரியலில் இருந்து விலக கூடாது என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இசைவாணி செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் அவர் சீரியலில் இருந்து உறுதியாக விலகி, கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வருகிறார். அவர் கண்ணம்மாவிற்கு சமமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ரோஷினி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் இந்த ஆண்டிற்கான 45வது வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் பாரதி கண்ணம்மா குறைவான புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் இந்த சீரியல் தற்போது பெரிய வீழ்ச்சியை சந்திக்க கண்ணம்மா மாற்றம் தான் காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ராதிகாவுக்கு தீபாவளி ட்ரெஸ் வாங்கி தரும் கோபி, பாக்கியாவிடம் வேலை கேட்கும் பெண்கள் – இன்றைய எபிசோட்!

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் தற்போது அதை சரி செய்யும் நோக்கில் கதையில் பல திருப்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதனால் புதிய கண்ணம்மா வந்த பின் எந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும் என அடுத்த வாரம் பார்க்கலாம். மேலும் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் 8.83 புள்ளிகளுடன் 7ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த டிஆர்பி வெளியான தேதிகளில் ரோஷினி நடித்திருந்தார். அதற்கே இவ்வளவு பின்னடைவு என்றால், புதுமுகம் நடித்த எபிசோடுகளுக்கு ரேட்டிங் என்ன வரப்போகிறது என்று சீரியல் குழு புலம்பி வருகிறது. டாப்12 வரிசையில் இடம் பிடித்திருக்கும் சீரியல்களின் முழுபட்டியல்,

  • கயல்: 10.46
  • சுந்தரி: 9.97
  • வானத்தைப் போல: 9.80
  • பாக்கியலட்சுமி: 9.15
  • பாண்டியன் ஸ்டோர்ஸ்: 9.13
  • அபியும் நானும்: 8.88
  • பாரதி கண்ணம்மா: 8.83
  • ரோஜா: 8.60
  • கண்ணான கண்ணே : 8.07
  • ராஜா ராணி 2: 7.71
  • தமிழும் சரஸ்வதியும்: 6.83
  • அன்பே வா: 6.78

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!