TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – 3வது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!

0
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' - 3வது இடத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'!
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' - 3வது இடத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'!
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – 3வது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களின் இந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் வழக்கம் போல ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதலிடத்தை பெற்றுள்ளது.

TRP ரேட்டிங்

பொதுவாக ஒரு சினிமா திரைப்படம் அல்லது சீரியல்களின் வெற்றி என்பது அதன் பார்வையாளர்களை வைத்து தான் கணிக்கப்படுகிறது. சினிமாவை பொருத்தளவு தியேட்டரில் ஒரு திரைப்படம் வெளியிடப்படுகிறது என்றால், விற்பனையாகும் மொத்த டிக்கெட்டுகள், கிடைக்கும் வசூல் அளவை பொறுத்து அதன் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் சீரியல்களின் ரீச் என்பது அதன் இலக்கு மதிப்பீடு புள்ளிகளை (TRP) பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

கோலாகலமாக நடந்த “பாரதி கண்ணம்மா” வெண்பா மகனின் பெயர் சூட்டு விழா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த TRP ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் அது ஒளிபரப்பான நேரங்களை வைத்து கணக்கிடப்படும். வழக்கமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் நேர சீரியல்கள் மொத்த தமிழ் சீரியல்களின் TRP ரேட்டிங்கிலும் முன்னணி இடங்களை பிடிப்பது வழக்கம். அதுவே விஜய் டிவி சீரியல்களை வைத்து மட்டும் கணக்கிடுக்கையில், இந்த TRP ரேட்டிங்கில் அடிக்கடி முதல் இடத்தை பிடிப்பது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மட்டும் தான்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினிக்கு நடந்த சோகம் – தவறவிட்ட முக்கிய பட வாய்ப்புகள்!

அந்த வகையில் இந்த வாரம் வெளியான மொத்த சீரியல்களிலும் அதிக பட்ச பார்வையாளர்களின் கவனம் பெற்று 11.6 புள்ளிகளுடன் மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 11.2 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ 10..9 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

  • ராஜா ராணி 2 – 9.6
  • தமிழும் சரஸ்வதியும் – 7.4
  • மௌனராகம் 2 – 6.8
  • பிக்பாஸ் சீசன் 5 – 5.4
  • நாம் இருவர் நமக்கு இருவர் – 4.3
  • தென்றல் வந்து என்னைத் தொடும் – 3.8
  • பாவம் கணேசன் மற்றும் நம்ம வீட்டுப் பொண்ணு – 3.4
  • காற்றுகென்ன வேலி – 3.3
  • வேலைக்காரன் – 3.2
  • முத்தழகு – 3
  • ராஜபார்வை – 2.6

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!