சீரியல் கிங் என நிரூபித்த சன் டிவி.. பரிதாபமான நிலையில் விஜய் டிவி – TRP பட்டியல் வெளியீடு!

0
சீரியல் கிங் என நிரூபித்த சன் டிவி.. பரிதாபமான நிலையில் விஜய் டிவி - TRP பட்டியல் வெளியீடு!
சீரியல் கிங் என நிரூபித்த சன் டிவி.. பரிதாபமான நிலையில் விஜய் டிவி - TRP பட்டியல் வெளியீடு!
சீரியல் கிங் என நிரூபித்த சன் டிவி.. பரிதாபமான நிலையில் விஜய் டிவி – TRP பட்டியல் வெளியீடு!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் விஜய் டிவி, சன் டிவி சீரியல்கள் தான் TRP-யில் போட்டி போடுகின்றனர். அந்த வகையில் இந்த வார TRP பட்டியலில் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள் இடம் பிடித்து மாஸ் காட்டி உள்ளன.

TRP பட்டியல்:

தமிழில் சினிமா ரசிகர்களை விட சீரியல் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர். காரணம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் சீரியல்களின் கதைகள் இருப்பது தான். அது மட்டுமில்லாமல் சீரியலில் ஒளிப்பரப்பாகி வரும் காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது. மேலும் தினசரி ட்விஸ்ட்களும் அது குறித்த ப்ரோமோக்களும் வெளியாகி, மக்களை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் வைக்கிறது. அப்படி பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், வார இறுதியில் TRP-யில் இடம் பெறும் சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்கள்.

இந்நிலையில் 38-வது வாரத்திற்கான TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் தான் முதல் 6 இடங்களை பிடித்துள்ளது. மறுபுறம் விஜய் டிவி சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு முதல் 5 இடங்களில் ஒரு இடம் கூட பிடிக்காமல் இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவி கயல் சீரியல் முதலிடத்தையும், வானத்தை போல சீரியல் இரண்டாம் இடத்தையும், சுந்தரி சீரியல் மூன்றாம் இடத்தையும், ரோஜா சீரியல் நான்காம் இடத்தையும், கண்ணான கண்ணே சீரியல் ஐந்தாம் இடத்தையும், எதிர் நீச்சல் சீரியல் ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளது.

புதிய வசதிகளுடன் வேற லெவலில் களமிறங்கி இருக்கும் Google செயலி – என்னனென்ன அம்சங்கள் தெரியுமா?

Exams Daily Mobile App Download

அதன் பின் 8.1 புள்ளிகளுடன் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் ஏழாம் இடத்தையும், பாக்கியலட்சுமி சீரியல் எட்டாம் இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒன்பதாம் இடத்தையும், ராஜா ராணி 2 சீரியல் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை பிடிப்பதில் விஜய் டிவி, சன் டிவி இடையே போட்டி நிலவி வந்த நிலையில், முதல் ஆறு இடம் கூட கிடைக்காமல் விஜய் டிவி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!