38 வயதில் பிரபல நடிகை திரிஷாவிற்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
38 வயதில் பிரபல நடிகை திரிஷாவிற்கு திடீர் திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
38 வயதில் பிரபல நடிகை திரிஷாவிற்கு திடீர் திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
38 வயதில் பிரபல நடிகை திரிஷாவிற்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. 38 வயதான அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் புது படங்களில் கமிட் ஆகவில்லை எனவும் கூறப்படுகிறது.

நடிகை திரிஷா:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக பேசப்பட்டவர் நடிகை திரிஷா. அவர் 1990 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றார். மேலும் அதே வருடம் பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் தோழிகளில் ஒருவராக அறிமுகமானார். அதன் பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். நாலு வருடங்கள் நாயகியாக தொடர்வதே சவாலான திரைத்துறையில், பதினட்டு வருடங்களாக நாயகியாக நடித்து வருகிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழிற்கு அடித்த ஜாக்பாட் – ரூ.25 லட்சம் பரிசு!

சமீப காலமாக இவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால் அவர் நயன்தாரா போல மாறுபட்ட கதைக்களத்துடன், நாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது இவரிடம் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் படத்தை தவிர மற்ற இரண்டு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன்பின் நடிகை திரிஷா வேறு எந்த புதிய படங்களிலும் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்து, நிச்சயதார்த்தத்துக்குப் பின் இருவருக்கும் பிரேக்அப் ஆகிவிட்டது. இந்நிலையில் அவரது 38வது பிறந்தநாள் அன்று திரிஷாவின் நெருங்கிய தோழியும், சில தெலுங்குப் படங்களில் திரிஷாவுடன் நடித்தவருமான சார்மி, திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், திரிஷா பேச்சிலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது என குறிப்பிட்டிருந்தார். எனவே திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!