ஜூலை 17 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – திரிபுரா அரசு அறிவிப்பு!

0
ஜூலை 17 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - திரிபுரா அரசு அறிவிப்பு!
ஜூலை 17 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - திரிபுரா அரசு அறிவிப்பு!
ஜூலை 17 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – திரிபுரா அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு திரிபுரா மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை ஜூலை 17ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. அம்மாநிலத்தில் தினசரி 15 மணிநேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல், 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – அவசர காலத்தில் பணம் எடுப்பதற்கான காரணங்கள்!

இந்நிலையில் திரிபுரா மாநில அரசு ஜூலை 17ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திரிபுராவில் கோவிட் -19 இன் ‘டெல்டா பிளஸ்’ வேரியண்ட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பல நகர்ப்புறங்களில் தினசரி 15 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஜூலை 17 வரை மாநில அரசு நீட்டித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் முதல் அதிகாலை 5 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அகர்தலா, ரனிர்பஜார், ஜிரானியா நகர், உதய்பூர், கைலாஷஹர், தர்மநகர், கோவாய், பெலோனியா, குமர்காட், தெலியாமுரா, சோனாமுரா நகர், அமர்பூர் நகர் மற்றும் சப்ரூம் நகர் ஆகியவற்றில் ஜூலை 17 அமலில் வரை இருக்கும். இந்த நகர்ப்புறங்களில் ஊரடங்கு உத்தரவு முதலில் மே 16 அன்று அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here