விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ட்ரெண்டிங் டயலாக் – திகைத்து போன குரேஷி!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ட்ரெண்டிங் டயலாக் - திகைத்து போன குரேஷி!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ட்ரெண்டிங் டயலாக் - திகைத்து போன குரேஷி!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ட்ரெண்டிங் டயலாக் – திகைத்து போன குரேஷி!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் எபிசோடுகள் வாரம்தோறும் வேற லெவலுக்கு கலகலப்பாக உள்ளது. இந்நிலையில் வாரந்தோறும் வெளியாகும் ப்ரோமோவை பார்த்து, எபிசோட் எப்போது ஒளிபரப்பாகும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் கோமாளி குரேஷியின் ஒரு டயலாக் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டிங் டயலாக்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை அனைத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. அதிலும் தற்போது ட்ரெண்டிங்கில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவை சேர்த்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து தற்போது மூன்றாவது சீசன் சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும் கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் ஸ்பெஷலே வாராவாரம் கோமாளிகள் விதவிதமான கெட்டப்புகளில் வருவதுதான். இதற்காக வாரந்தோறும் கோமாளிகள் கெட்டப் தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் Part Time வேலை ரெடி..!

அந்த வகையில் கடந்த மாதம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித்தியாசமாக குக்குகள் மற்றும் செஃப்களின் கெட்டப்புகளில் கோமாளிகள் பங்கேற்றனர். குறிப்பாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் உள்ளம் கவர்ந்த போட்டியாளராக விளங்கியவர் குரேஷி, அவர் இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா போல் கெட்டப் போட்டு இருந்தார். குரேஷியும் ஸ்ருத்திகாவைப் போலவே நடை, உடை பாவனையில் அசத்தியிருக்கிறார். இந்நிலையில் நேற்று குரேஷி இன்ஸ்டா லைவ்வில் வந்த போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்ட கெட்டப்பில் எது பிடிக்கும் என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் “ஸ்ருதிகா போல் கெட்டப் போட்டது தான் ரொம்ப புடிச்சிருந்துச்சு”, மேலும் ” நீ எவ்ளோ சாப்பிட 10 சாப்டேன், கிழிச்சா நான் TEN சாப்டேன்” இந்த டயலாக் அதிகமாக வைரலாகி இருக்கு, மொழி தெரியாதவங்க கூட ரீல்ஸ் பண்றாங்க என பதில் அளித்திருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!