ஆன்லைனில் TRB தேர்வுகள் – செப்டம்பர் & நவம்பர் மாதங்களில் துவங்கும் என அறிவிப்பு!

0
ஆன்லைனில் TRB தேர்வுகள் - செப்டம்பர் & நவம்பர் மாதங்களில் துவங்கும் என அறிவிப்பு!
ஆன்லைனில் TRB தேர்வுகள் - செப்டம்பர் & நவம்பர் மாதங்களில் துவங்கும் என அறிவிப்பு!
ஆன்லைனில் TRB தேர்வுகள் – செப்டம்பர் & நவம்பர் மாதங்களில் துவங்கும் என அறிவிப்பு!

தேர்வு முறைகேடுகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதான TRB தேர்வுகள் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TRB தேர்வுகள்

பொதுவாக அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய, அரசு நடத்தும் TRB தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

CBSE 10th Result 2021 – ஆகஸ்ட் 2ல் வெளியீடு?

அதாவது பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் பணிபுரிய, ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து TET மற்றும் TRB போன்ற தேர்வுகளும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதான TRB தேர்வுகளை இந்த ஆண்டு மீண்டுமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் தற்பொழுது வெளியாகியுள்ள புதிய அறிவிப்புகளின் படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை TRB தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுகள் End to End encrypted முறையில் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் கணினி ஆய்வகங்களில் தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. TET, பாலிடெக்னிக் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் ஆகிய தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!