தமிழகத்தில் இருந்து தாஜ்மஹாலுக்கு ரயில், விமானம் மூலம் சுற்றுலா!

0
தமிழகத்தில் இருந்து தாஜ்மஹாலுக்கு ரயில், விமானம் மூலம் சுற்றுலா!
தமிழகத்தில் இருந்து தாஜ்மஹாலுக்கு ரயில், விமானம் மூலம் சுற்றுலா!
தமிழகத்தில் இருந்து தாஜ்மஹாலுக்கு ரயில், விமானம் மூலம் சுற்றுலா!

தமிழகத்தில் கோவை மாவட்டத்திலிருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மற்றும் ரயில் மூலம் செல்ல இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்து அதற்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது.12 நாட்கள் சுற்றுலாவிற்கு ரூ.12 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் சுற்றுலா:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, கடும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர். அதில் தொழில்புரியும் பணியாளர்களும் வேலையின்றி சிரமப்பட்டனர். நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பெரும்பாலும் மக்கள் பயணங்களை தவிர்த்தனர். அதனால் போக்குவரத்து துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை வேண்டாம் – எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!

அதனை தொடர்ந்து சுற்றுலா செல்ல அனைத்து மாநில அரசுகளும் தொடர்ந்து தடையை அறிவித்து வந்ததால் சுற்றுலாத்துறை சரிவை சந்தித்துள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலிருந்து இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தாஜ்மஹாலுக்கு விமானம் மற்றும் ரயில் மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்து முன்பதிவை தொடங்கியுள்ளது.

10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு !

பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் 12 நாட்களுக்கு சுற்றுலாவாக கோவா, சர்தார் படேல் சிலை, ஜெய்ப்பூர், டெல்லி, ஹைதராபாத் செல்ல ரூ.12 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ம் தேதி புறப்படுகிறது. அதே போல் விமானம் மூலம் காசி, அலகாபாத், புத்த கயா ஆகிய இடங்களுக்கு செல்ல ரூ.27,460 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், ஆக்ரா தாஜ்மஹால் செல்ல செல்ல 26,600 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here