சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரங்கள் இதோ!

0
சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரங்கள் இதோ!
சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரங்கள் இதோ!
சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரங்கள் இதோ!

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்று பாதைகள் குறித்த இடங்களை இப்பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்.

மாற்று பாதை:

தமிழகத்தில் சாலைகளில் மேம்பாலம் கட்டுதல், சாலைகளை சீரமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்றவைகளின் போது அந்த சாலைகளில் இடையூறு ஏற்படாத வண்ணம் தடுக்க வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்படாத வகையில் மாற்று பாதைகளில் வாகனம் செல்ல போக்குவரத்து துறையினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 2 முதல் அடுத்த 4 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!

வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி சென்று 200 மீட்டருக்கு மேல் சென்று சேமியர்ஸ் சாலையை அடையாலாம். அதே போல் செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன் “U திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேரும் இடத்தை அடையலாம்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 300 மீட்டர் தூரத்தில் தேனாம்பேட்டைக்கு செல்லலாம். மாற்று பாதைகளை அறிந்து அதற்கேற்றவாறு வாகன ஓட்டிகள் செல்ல திட்டமிடுமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்று பாதைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் Mail id:- [email protected] என்ற இணையதள முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!