சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – கனமழை எதிரொலி!

0
சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - கனமழை எதிரொலி!
சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - கனமழை எதிரொலி!
சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – கனமழை எதிரொலி!

குமரிக்கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் பெய்ய தொடங்கிய கனமழை அனைத்து மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரவு, பகலாக பெய்த கன மழையால் தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேக்கமுற்று பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது. தலைநகர் சென்னை வெள்ளக்காடாகவே மாறியது. பொது இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கியது.

தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 1 நாள் தான் இருக்கு!

இதனால் பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமலும் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் தேங்கியுள்ள மழை நீருக்கு மத்தியில் வாகனங்களும் செல்ல முடிய நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்திருப்பதால் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து மாற்றம்:

  • அதன்படி கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி செய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வளசரவாக்கம் பகுதியில் செல்ல கூடிய வாகனங்கள் கேசவர்த்தினி சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவையா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
  • அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மேடவாக்கம் முதல் மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் போக்குவரத்து பாதை தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here