தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணிமாறுதல் கலந்தாய்வு! முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - பணிமாறுதல் கலந்தாய்வு! முக்கிய உத்தரவு!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - பணிமாறுதல் கலந்தாய்வு! முக்கிய உத்தரவு!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணிமாறுதல் கலந்தாய்வு! முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான ஆசிரியர் விபர பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம்:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நியமனமானது பணிமாறுதல் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? வேகமெடுக்கும் ஓமிக்ரான்! முதல்வர் இன்று ஆலோசனை!

மேலும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் இதுவரை ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த பணி மாறுதல் கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இந்த கலந்தாய்வு மூலம் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொழிற்பிரிவுக்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – அகவிலைப்படி உயர்வு! சூப்பர் அறிவிப்பு!

அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற முழு விபரங்களையும் சேகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்கள் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். இத்தகைய ஆய்வு பட்டியலை பிழையின்றி தயார் செய்து அனுப்புமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here