தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி – இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!

0
தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி - இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!
தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி - இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!
தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி – இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!

தமிழகத்தில் புதிதாக அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுப்பணி பயிற்சி:

தற்போதைய காலகட்டத்தில் அரசுப்பணி பெறுவது என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. எனவே படித்த இளைஞர்கள் பலரும் அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தயாராகி வருகின்றனர். இதற்காக பலர் பயிற்சி நிறுவனங்கள் சென்று தங்களை தகுதிப்படுத்தி வருகின்றனர். ஆனால் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் கடந்த 2 வருடங்களாக அரசுப்பணி தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பெரும் மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் முக்கிய அறிவிப்பு – மானியத்தொகை விடுவிப்பு!

கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் விரைவில் அரசுப்பணி தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் கடந்த மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இனி புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (அக்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதற்கு முன்பு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது. ஆனால் இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்திலிருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here