2024 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் – கால அட்டவணை வெளியீடு.. விவரம் உள்ளே!
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு நாட்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ரயில் டிக்கெட்:
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரியும் பலரும் தமிழகத்திற்கு வருகை புரிவர். அத்துடன் மக்கள் தங்களது குடும்பத்துடன் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இதனை கருத்தில் கொண்டு ரயில்வே துறை சார்பாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை கால பயணத்திற்கான காண ரயில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ ஒரே சம்பளம் – ஆட்சியர்களுக்கு உத்தரவு!
டிக்கெட் முன்பதிவு விவரம்:
- ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்வோர் இன்று முதல் (செப்.13) டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- அதே போல ஜன.12ம் தேதி பயணம் செய்வோர் செப்.14 ஆம் தேதி அன்று டிக்கெட் புக் செய்யலாம்.
- ஜன.13 ஆம் தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விருப்போர் நாளை மறுநாள் (செப்.15) டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
- ஜன. 15ம் தேதி செல்லவிருப்போர் செப். 17 அன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
- ஜன. 16ம் தேதி பயணிக்க விருப்போர் செப். 18ம் தேதி டிக்கெட் பெறலாம்.
- ஜன. 17 அன்று ரயிலில் செல்ல செப். 19ம் தேதி புக் செய்யலாம்.