சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும் – ரயில்வே திட்டம்!

0
சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும் - ரயில்வே திட்டம்!
சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும் - ரயில்வே திட்டம்!
சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும் – ரயில்வே திட்டம்!

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு, சுற்றுலாவை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ரயில் பெட்டிகள் குத்தகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டி:

இந்தியாவில் அதிகமான ஊழியர்களை கொண்டு இயங்கும் சேவை ரயில்வே சேவை. இதன் மூலம் பல லட்சம் மக்கள் பயணம் செய்து பயனடைகின்றனர். தற்போது இந்தியன் ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. ரயில் பெட்டிகளை விருப்பமுள்ள சுற்றுலா நடத்துனர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், கலாச்சாரம், மதம் மற்றும் இதர சுற்றுலா துறையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள, இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை NEET நுழைவுத்தேர்வு – தமிழகத்தில் கூடுதல் மையங்கள் ஒதுக்கீடு!

ஆர்வமுள்ளவர்கள் ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். காலியாக உள்ள அறையில் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க முடியும், அதேபோல் ரயில் பெட்டிகளை விலைக்கு வாங்கவும் முடியும். அவ்வாறு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டும் செய்ய குத்தகைதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்று குத்தகைக்கு எடுப்பதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் அந்த பெட்டியின் ஆயுட்காலம் வரை குத்தகை விடப்படும்.

LIC பாலிசி உடன் பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

மிகவும் எளிய முறையில் ரயில் பெட்டிகளை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள முடியும். தகுதியின் அடிப்படையில் எளிய முறையில் விண்ணப்பித்து குத்தகையை பெற்றுக்கொள்ளலாம். குத்தகை கட்டணம் உட்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும். ரயிலுக்குள் விளம்பரத்திற்கு அனுமதி, ரயில் பெட்டிகளுக்கு பிராண்ட் பெயர் வைக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இந்த சுற்றுலா ரயில் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிர்வாக இயக்குனர் அளவிலான குழுவை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!