சின்னத்திரையில் பிரபலமான ஜோடியான ராகவ் ப்ரீத்தா வீட்டில் நடந்த சோகம் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
சின்னத்திரையில் பிரபலமான ஜோடியான ராகவ் ப்ரீத்தா வீட்டில் நடந்த சோகம் - அவரே வெளியிட்ட வீடியோ!
சின்னத்திரையில் பிரபலமான ஜோடியான ராகவ் ப்ரீத்தா வீட்டில் நடந்த சோகம் - அவரே வெளியிட்ட வீடியோ!
சின்னத்திரையில் பிரபலமான ஜோடியான ராகவ் ப்ரீத்தா வீட்டில் நடந்த சோகம் – அவரே வெளியிட்ட வீடியோ!

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக கலக்கி வந்தவர்கள் ராகவ் மற்றும் ப்ரீத்தா. இந்நிலையில் ப்ரீத்தா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை என அதில் சொல்லி இருக்கிறார்.

நடிகை ப்ரீத்தா:

90’ஸ் காலத்தில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ஜோடி தான் ராகவ் மற்றும் ப்ரீத்தா. இவர்களது நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் இருவரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது நடன திறமையை காட்டி பலர் ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக இருந்தனர். சின்னத்திரை நடிகராக ராகவ் பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அனைத்து சீரியலிலும் ஒரே காட்சி தானா? விஜய் டிவியை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

ராகவ் நடிகராக மட்டும் இல்லாமல் கம்போஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டுள்ளார். அதனால் இந்த ஜோடிக்கு இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறது. மேலும் ராகவ் அவர்களின் மனைவி தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பல உடல் ஆரோக்கியம் பற்றிய வீடியோ மற்றும் ஆன்மீக வீடியோக்களை பதிவிடுவார். அதற்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ் இருக்கின்றனர். மேலும் வயதானாலும் கணவன் மனைவி இருவரும் நடனம் ஆட ரசிகர்கள் அதை விரும்பி பார்க்கின்றனர்.

சௌந்தர்யா கையால் திறக்கப்பட்ட புது மருத்துவமனை, அட்மினாக வந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய அம்மா இன்று கீழே விழுந்துவிட்டார். அதில் இருந்து அவரால் பேச முடியவில்லை கை, கால்கள் வரவில்லை அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் என்று சோகத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் ப்ரீத்தா. தன்னுடைய அம்மா தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் அதில் வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். ப்ரீத்தா அம்மா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!