போக்குவரத்து நெரிசலில் திக்கி திணறும் சென்னை – வாகனங்கள் நகர்ந்து செல்லும் அவலம்!!

0
போக்குவரத்து நெரிசலில் திக்கி திணறும் சென்னை - வாகனங்கள் நகர்ந்து
போக்குவரத்து நெரிசலில் திக்கி திணறும் சென்னை - வாகனங்கள் நகர்ந்து
போக்குவரத்து நெரிசலில் திக்கி திணறும் சென்னை – வாகனங்கள் நகர்ந்து செல்லும் அவலம்!!

பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்கு மீண்டும் திரும்பி வருவதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிலோ மீட்டர்களுக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை கொண்டாடும் விதமாக பலரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்தனர். அந்த வகையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இப்போது, பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் பலரும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

வண்டலூர் பூங்காவிற்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை – பொங்கல் விடுமுறை எதிரொலி!!

Follow our Twitter Page for More Latest News Updates

அந்த வகையில் எக்கச்சக்கமான வாகனங்கள் தற்போது சென்னையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளிலும் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!