சென்னையில் ‘இந்த’ சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – காவல்துறை தகவல்! காரணம் இதோ!

0
சென்னையில் 'இந்த' சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை தகவல்! காரணம் இதோ!
சென்னையில் 'இந்த' சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை தகவல்! காரணம் இதோ!
சென்னையில் ‘இந்த’ சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – காவல்துறை தகவல்! காரணம் இதோ!

தமிழகத்தில் கடந்த 31ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளதால் சென்னையில் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி தினவிழா கடந்த 31ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நாளில் அனைத்து மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் பூஜைகளுக்காக வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து தற்போது விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப் 2 & 2A தேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி? காரணம் இது தான்!

அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, ஆர்.கே.சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளும் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், அடையாரிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், இராயப்பேட்டை நெடுஞ்சாலை இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ்ரோடு, ஸ்மித் ரோடு அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக பாரிமுனைக்கு செல்லலாம். அதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ள சாலைகள் மாற்றத்திற்கேற்ப தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த போக்குவரத்து மாற்றம் சென்னையில் இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!