நாடு முழுவதும் ஒரே நாளில் 72,330 பேருக்கு கொரோனா – 354 பேர் பலி!!
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 72,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து, பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இறப்பு விவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்பு 72,330 ஆகும். இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 459 பேர் பலியானதால், இறப்பு எண்ணிக்கை 1,62,927 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 40,382 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,74,683 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தேர்தல் எதிரொலி!!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை சிகிச்சையில் 5,84,005 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் வீதம் 4.55% ஆகவும், குணமடைந்தவர்களின் வீதம் 94.11% ஆகவும், இறப்பு வீதம் 1.34% ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இதுவரை 6,51,17,896 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்