IND vs WI: மீண்டும் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IND vs WI: மீண்டும் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: மீண்டும் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: மீண்டும் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த மாதம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இத்தொடரில் இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மீண்டும் இணைந்துள்ளன.

ரசிகர்கள் உற்சாகம்:

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை நழுவவிட்டதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது . வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரி காரணமாய் தென்னாபிரிக்கா தொடரில் இடம் பெறாமல் இருந்த இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இத்தொடரில் இடம்பெற்ற அணியை வழிநடத்துவார் என்று BCCI தெரிவித்துள்ளது

பிப்.1 முதல் 10 – 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

ஜனவரி 27 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடருக்கான இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை BCCI அறிவித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, யுஸ்வேந்திர சாஹலுடன் ஜோடி சேர குல்தீப் யாதவ் தேர்வாகியுள்ளார். அதே நேரத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் ODI மற்றும் T20I அணிகளில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காயம் காரணமாக கடந்த தென்னாபிரிக்கா தொடரில் இடம்பெறும் இருந்த இந்திய அணி ஆல் ரவுண்டர்கள் ஹரித் பாண்டிய மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடுவார்கள் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் அணி வீரர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பளிக்க பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணி:-

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!