டாப் சீரியல்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய ப்ரமோ வீடியோ – ஒரு அலசல்!

0
டாப் சீரியல்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய ப்ரமோ வீடியோ - ஒரு அலசல்!
டாப் சீரியல்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய ப்ரமோ வீடியோ - ஒரு அலசல்!
டாப் சீரியல்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய ப்ரமோ வீடியோ – ஒரு அலசல்!

டிவி சீரியல்களின் அன்றைய ப்ரமோ தான் அந்த சீரியலை மக்கள் பார்க்கும் வகையில் ஆர்வத்தை தூண்டும். டாப் சீரியல்களின் இன்றைய ப்ரமோ மற்றும் அதற்கான ரசிகர்களின் கமெண்டுகள் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

டாப் சீரியல்கள்:

சினிமாவை விட தற்போதைய காலகட்டத்தில் சீரியல் நடிகர், நடிகைகளே மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சீரியல்களின் கதை உள்ளதே அதற்கு காரணம். முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே சீரியல்களை பார்ப்பார்கள் என்ற நிலை இருந்தது. தற்போது, இளைஞர்கள் கூட சீரியலை பார்த்து வருகின்றனர். இதற்கு உதாரணம் தினசரி வெளியாகும் சீரியல்களின் ப்ரோமோவிற்கு சமூக வலைத்தளங்களில் வரும் கமெண்டுகளே சாட்சி. அந்த வகையில் டாப் 5 சீரியல்களின் இன்றைய ப்ரோமோ மற்றும் அதற்கான கமெண்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வில்லாத DRDO வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி || ரூ.54,100/- ஊதியம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து தற்போது சிரமத்தில் இருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதற்கு ரசிகர் ஒருவர், தனி குடித்தனம் போறவங்க எல்லார் நிலைமையும் இப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் கண்ணன் என்றும் மேலும் ஒரு ரசிகர் வேலை இல்லாம உன்ன யாருப்பா கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்று கேட்டுள்ளார். மேலும் பலரும் கண்ணன் ஐஸ்வர்யா விரைவில் வீட்டோடு இணைய வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய ப்ரோமோவில் பாரதியும் கனமாவும் கடுமையான வாக்குவாதத்தில் உள்ளது போல், வீடியோ வந்து உள்ளது. இதற்கு, ரசிகர் ஒருவர் இனிமேதான் ஆட்டம் இருக்கு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படித்தான் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மா இனிமே என்ன செய்வர் என்றும், மற்றாரு ரசிகர் ஒருவர் பாரதிக்கு அங்க வேலையே இல்லையே வீட்லதான் வேலை இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

பாக்யலட்சுமி:

பாக்கியா கோபியின் அலுவலகத்திற்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கும் போது, அங்கு கோபி ராதிகாவுடன் உள்ளது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து விட்டு ரசிகர் ஒருவர்,ஏன் பாக்யா அம்மா பொய் சொல்றீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி மாட்டிருப்பாரு இந்த மேனேஜர் எச்சரிக்கை பண்ணிட்டாரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி எப்போதான் மாட்டுவாரு டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படித்தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2:

இன்றைய ப்ரோமோவில் விக்கியை சந்தியா தாக்குவது போல் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர், ஒருவர் பொறி வச்சி புடிச்சிட்டீங்களாஎன்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாவின் தைரியத்தை பாராட்டியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எல்லா பெண்களும் இப்படியே இருந்துட்ட ஊருக்குள்ள ஒரு தப்பும் நடக்காது என்று கூறியுள்ளார். மேலும் பலரும் சந்தியாவுக்கு பாராட்டுக்களே தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா:

இன்றைய ரோஜா ப்ரோமோவில் அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் அனுவின் திட்டத்தை பற்றி பேசுவது போல் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்கள் இப்படியே திட்டத்தை நிறைவேற்றுங்கள் இதை பார்க்கும் ரசிகர்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுது அதில் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீ ரோஜா சீரியல் இப்போல்லாம் அது மதிப்பை அதுவே குறைத்து கொள்கிறது என்று கூறியுள்ளார். மறுபடியும் முதல்ல இருந்தா …. நாங்க ரொம்ப பாவம்டா.. இதுக்கு கொரனாவே மேலு என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!