“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “பாக்கியலட்சுமி” வரை – சீரியல் ப்ரோமோவின் டாப் கமெண்ட்கள்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் "பாக்கியலட்சுமி" வரை - சீரியல் ப்ரோமோவின் டாப் கமெண்ட்கள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “பாக்கியலட்சுமி” வரை – சீரியல் ப்ரோமோவின் டாப் கமெண்ட்கள்!

தமிழ் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களின் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதில் ரசிகர்கள் வெளியிட்ட கமெண்டுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சீரியல் ரசிகர்கள்:

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்த ஒரு விஜய் டிவி, சன் தொலைக்காட்சியின் சீரியல்களே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்ன தான் 30 நிமிட கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இன்றைய எபிசோடுக்கான பற்றிய 30 வினாடி ப்ரோமோவிற்கு ரசிகர்கள் அதிகம். மேலும் அந்த ப்ரோமோக்களில் வரும் கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பத்தினரும் கவலையில் உள்ளார். ஆனால் இருவரும் கவலை இல்லாமல் இருப்பது போல காதல் காட்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர் இந்த சீரியலை குழந்தைகளும் பார்ப்பார்கள் ஆதலால் காதல் காட்சிகளை தவிருங்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

தமிழக அரசின் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

மற்றொரு ரசிகர் இது இப்போ ரொம்ப முக்கியம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் அங்கே இரு குடும்பமும் அழுகுறாங்க, உங்களுக்கு இங்க ரொமான்ஸ் கேட்குதா என பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தனது அம்மாவிற்கு அடிபட்டுள்ளதால் ஆதரவாக இருக்கிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் அம்மா பையன் இப்படித்தான் இருக்கனும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எழில் பாக்கியா மாதிரி எல்லா வீட்லயும் இருக்கனும் என பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், தனக்கு 8 வருடங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரிந்து விட்டது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியான நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் பிளாஷ்பேக்லையும் அதே சேலையா என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போதான் கதையில் ஒரு திருப்பம் வந்துருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கண்ணம்மா ஆட்டம் இனிதான் ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ நல்லாதான் இருக்கும் அடுத்த 2 நாள்ல திரும்பவும் கடுப்ப ஏத்திருவீங்க என்று பதிவிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ராஜாராணி 2

ராஜாராணி 2 சீரியலில், விக்கியிடம் பார்வதி பேசிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர் ஒருவர் பாவம் பார்வதி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆமா அர்ச்சனா உன்னவிட கிரிமினல் தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா சீரியலும் ஒரே பேட்டர்ன் தான் என்று கூறியுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் நாச்சியாருக்கு ஆதரவாக இருக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மாயன் நாச்சியாருக்கு தான் சப்போர்ட் செய்வார் என்று கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இனி மாயனுக்கும், மாறனுக்கும் சண்ட ஆரம்பம். இத மாசாணி குரூப் பாத்து சந்தோசப்படும் கண்டுகளியுங்கள் “பாவம் மாயன்” என பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!