‘இந்த சீரியலுக்கு பாவம் சௌந்தர்யானு பேர் வச்சிருக்கலாம்’ – ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'இந்த சீரியலுக்கு பாவம் சௌந்தர்யானு பேர் வச்சிருக்கலாம்' - ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
'இந்த சீரியலுக்கு பாவம் சௌந்தர்யானு பேர் வச்சிருக்கலாம்' - ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘இந்த சீரியலுக்கு பாவம் சௌந்தர்யானு பேர் வச்சிருக்கலாம்’ – ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதல் ‘ரோஜா’ சீரியல் வரை கிடைத்திருக்கும் டாப் கமெண்ட்ஸ் குறித்து இப்பதிவில் காணலாம்.

சீரியல் ப்ரோமோ

திரையில் 3 மணி நேரம் வரை ஒளிபரப்பாகும் ஒரு திரைப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு சின்னத்திரை தொடர்களுக்கும் கிடைக்கிறது. அதிலும் சில முக்கிய பிரபலங்களின் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது 2மட்டுமே வெளியாகும் சூழலில், ஒவ்வொரு நாளும் ரசிகர்களை சந்தித்து வரும் சின்னத்திரை பிரபலங்கள் மக்களிடம் ஏகபோக ஆதரவை பெற்று வருகின்றனர். அதிலும் சில குறிப்பிட்ட சீரியல்களுக்கு அதிகமாகவே கவனம் கிடைக்கிறது. அப்படி தினசரி ஒளிபரப்பப்படும் சீரியல்களின் இன்றைய நாளுக்கான எபிசோடுகள் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்றுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பா ஃபரீனா திருமண நாள் கொண்டாட்டம் – இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!

அந்த வகையில் எந்த சீரியலுக்கு எவ்விதமான கமெண்டுகள் கிடைத்துள்ளது என்பதை இப்பதிவில் காணலாம். இதில் முதலாவதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ப்ரோமோவுக்கு அதன் ரசிகர் ஒருவர் இன்று கதிர் – முல்லை ரொமான்ஸ் சீன் வேற லெவல் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து முதலில் ஜீவா, இப்போது மூர்த்தி அடுத்து நீங்க தானே.. நடத்துங்க, ரொமான்ஸ்ல உங்களை விட கண்ணன் முந்திடுவார் போல, அடுத்து கதிர் முல்லைக்கு குழந்தை பிறக்க போகிறது.

இந்த சீனுக்காக தானே இவ்வளவு நாள் காத்திருந்தோம், கியூட்டான நடிப்பு என பாராட்டியுள்ளனர். அடுத்ததாக ‘பாரதி கண்ணம்மா’ ப்ரமோவை ரசித்த ரசிகர்கள், அஞ்சலிக்கு இந்த கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு, என்ன பிரச்சனை வந்தாலும் சரி புடவைக்கு மேட்ச்சா நெயில் பாலிஷ் மட்டும் அடிச்சுடுறாங்க எங்க கண்ணம்மா, இந்த சீரியலுக்கு ‘பாவம் சௌந்தர்யா’ன்னு பேர் வச்சிருக்கலாம், இன்னும் எங்கள பைத்தியக்காரனவே நினைச்சிட்டு இருக்கல்ல.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விடை பெறும் முல்லை? உண்மை நிலவரம் இதோ!

எவ்வளவு நாள்தான் இப்படி இழுத்துக்கிட்டே போவீங்க என்று விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அடுத்ததாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ப்ரோமோவுக்கு தலைவன் கோபி நடிப்புல எல்லா தப்பும் மறந்துடுது, கோபிக்காகவே உருவாக்கப்பட்டது போல இருக்கு இந்த சீன், கோபியை காமெடி பீஸா மாத்தி விட்ருங்க டைரக்டர் சார், தலைவன் கோபி வேற லெவல் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலின் ப்ரோமோவுக்கு சிவகாமி அடுத்த பிரச்சனைக்கு ரெடி ஆகிட்டாங்க.

சந்தியாவுக்கு ஒரு பிரச்சனை பார்சல், தப்பு பண்ற அர்ச்சனாவுக்கு தான் எல்லாம் சாதகமா இருக்கு என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். கடைசியாக ‘ரோஜா’ சீரியலின் ப்ரோமோவுக்கு போலீஸ அழைச்சுட்டு வந்து கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம், ரோஜா மற்றும் பூஜாவின் ஒற்றுமை சூப்பர், அண்ணன் தம்பி சண்டை நல்லா இருக்கு என்று பதிவிட்டுள்ளனர். இந்த கமெண்டுகளை வைத்து பார்க்கும் போது விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி ராதிகாவிடம் மாட்டும் அந்த வேளையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here