‘கோபி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு’ – ரோஜா முதல் பாக்கியலட்சுமி வரை சீரியல்களின் கமெண்ட்ஸ்!

0
'கோபி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு' - ரோஜா முதல் பாக்கியலட்சுமி வரை சீரியல்களின் கமெண்ட்ஸ்!
'கோபி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு' - ரோஜா முதல் பாக்கியலட்சுமி வரை சீரியல்களின் கமெண்ட்ஸ்!
‘கோபி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு’ – ரோஜா முதல் பாக்கியலட்சுமி வரை சீரியல்களின் கமெண்ட்ஸ்!

தினசரி சீரியல்களின் ப்ரோமோவிற்கான ரசிகர்களின் கமெண்டுகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது. இதனால் சீரியல் ப்ரோமோ குறித்த கமெண்டுகள் பிரபலமாகி வருகிறது.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரை சீரியல்கள் தற்போது மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. அதில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சினிமாவை போல் அனைத்து வகையான கதை அம்சத்துடனும் சீரியல்கள் வருவதால் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தினசரி எபிசோடிற்கான காட்சிகள் குறித்து ப்ரோமோவாக வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா:

அனு முள் மீது நடனமாட வேண்டும் என்று அர்ஜுன் சொல்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜுன் அனுக்கு நல்ல வைத்தியம் பாட்டி கையால சாட்டை அடி சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராட்ஷ்ஷசியான. பிரியா முகத்தில் பயம். இப்பதான் சந்தோஷமாக இருக்கு என்று கூறியுள்ளார்.

‘பிக் பாஸ்’ வீட்டில் வந்த வேலையை ஆரம்பித்த அபிஷேக் – ப்ரியங்காவிற்கு குட்டு! ப்ரோமோ ரிலீஸ்!

அனுக்கு பாட்டி மேல சந்தேகம் வந்துள்ளது என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். செண்பகம் உயிரோடு நல்ல படியாக வந்தாச்சு.. அதனால் அவர் ஃபோட்டோ எடுத்து விட்டு, பிரதாப் அப்பா, அதாவது அன்னபூரணி பாட்டியின் கணவர் தாத்தா ஃபோட்டோவை வைக்கலாமே.. என கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

அஞ்சலிக்கு குழந்தை பிறந்து விடுகிறது, ஆனால் அஞ்சலியும், அகிலும் கண் திறக்காமல் மயக்க நிலையில் இருப்பதாக ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன அகில் இப்படி ஆகிட்டீங்ளே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதையெல்லாம் பண்ணது வெண்பா தான் ஆனா அது யாருக்கும் தெரியுர மாதிரி காமிக்கவே மாட்டீங்களே பாரதிய பொருத்தவரை வெண்பா நல்லவள் அப்படித்தானே டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா கதறுகிற மாதிரி ஏதாவது செய்யுங்கள என்று கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி:

ராதிகாவிடம் கோபி பாக்கியவைப் பற்றி தவறாக கூறி வருகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி தன்னோட வேலையை காட்ட தொடங்கிவிட்டார் இனி என்ன நடக்க போகுதோ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அவ்ளோ தைரியம் இருக்குள்ள கோபி அப்போ ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வர பிரச்சனையை பேஸ் பண்ணலாமே என்று கூறியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் பிரசவத்தில் நடந்தது இது தான் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

மேலும் ஒரு ரசிகர் அவன் எது சொன்னாலும் நம்புது பாரு ராதிகா ஒரு முட்டாள் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செந்தில் இப்போதான் சரியான வேலை செய்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனா எவ்ளோ பண்ணாலும் திருந்தாத கேரக்டராச்சே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்:

தனமும், மற்றவர்களும் சேர்ந்து தமிழுக்கு திருமணம் செய்ய பெண் இருப்பதாக கூறுவது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மூர்த்தி அடிச்ச ஒரே ஒரு கல்லு இப்போ சம்பந்தம் பேசற அளவுக்கு கொண்டு வந்துருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தமிழ் சார் என்ன படிச்சிருக்காரு… சீரியலா இருந்தாலும் நியாயம் வேண்டாமா சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா கேரக்டர தவறா வேற யாரு கேரட்டும் பாக்குறதுக்கே நல்லா இல்ல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!