விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – சீரியல்களில் டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி' முதல் சன் டிவி 'ரோஜா' வரை - சீரியல்களில் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி' முதல் சன் டிவி 'ரோஜா' வரை - சீரியல்களில் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – சீரியல்களில் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் இன்றைய எபிசோடுகள் குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. அதில் ரசிகர்கள் செய்த கமெண்ட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

தமிழ் வெள்ளித்திரை படங்களை விட தினமும் அன்றாட வாழ்க்கையில் ஒன்றான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. எல்லார் குடும்பத்திலும் நடக்கும் நிகழ்வுகளை பற்றியே கதை இருப்பது தான் சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. அதனை பயன்படுத்தி இன்றைய சீரியல்களில் நடைபெறும் ட்விஸ்ட் பற்றி முன்னதாகவே வெளியிடப்படும் ப்ரோமோ வெளியிடப்படுகிறது. இந்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் கமெண்ட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழும் சரஸ்வதியும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழும் சரஸ்வதியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் சீரியலில், மூர்த்தி குடும்பத்துடன் இணைந்து கோதை குடும்பத்தாரும் மகாபலிபுரம் செல்ல திட்டமிடுகின்றனர். அப்போது சரஸ்வதி தனத்துடன் வர கோதை அதை பார்த்து சந்தோசப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதுவே பரவாயில்லை.பாரதி கண்ணம்மா மாதிரி இல்லமா விரு விருனு போகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நான் இதை ஹாட்ஸ்டாரில் பார்த்துவிட்டேன். சரஸ்வதி வரும்போது இந்த மியூசிக் அதில் போடவில்லை என்று ஒருவர் கூறிள்ளார். தமிழிமும் சரஸ்வதியும் செம்மையா இருக்குபா பாரதி கண்ணம்மா பாக்குறதுக்கு இதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியல் விறுவிறுப்பாக செல்வதாகவே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவும் பாரதியும் விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றம் செல்ல, குடும்ப வாழ்க்கையை பற்றி நீதிபதி பேசுகிறார். பின் பாரதியும் கண்ணம்மாவும் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒன்பது லக்கினத்தில் உச்சம் பெற்ற ஒருவன் (டைரக்டர்) ஒரு கோர்ட்டு சீன 100 எபிசோட் கூட எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆர்யன் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டும் மழையில் சர்ப்ரைஸ் கொடுத்த ஷபானா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பழைய கண்ணம்மா இருந்துருந்தா 6 மாதம் சேர்ந்து வாழும் பொது சூப்பர் ஹா இருந்துருக்கும் என கூறியுள்ளார். கண்ணம்மா இல்லாமல் இந்த சீரியல் நல்லாவே இல்லை என்றும் பழைய கண்ணம்மா இல்லாதது சீரியல் மீதான ஆர்வத்தை குறைத்து விட்டது என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இந்த தீர்ப்பை இதை ஒரிஜினல் கண்ணம்மா ரோஷினி இருக்கும் போது கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியலில், பாட்டி ரோஜாவை பேத்தியாக ஏற்றுக்கொள்ள இருக்கும் நிலையில், அப்போது அணு அங்கே வருகிறார். ரோஜாவை பாட்டி கொஞ்சுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தயவுசெய்து இப்படியே கொண்டு போங்க. ரோஜா தான் அனு என்று நிருபித்து கதையை கொண்டு போனால் நல்லா இருக்கும் என்று கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், முல்லையுடன் இணைந்த பாக்கியா – புது சங்கமம்? ரசிகர்கள் உற்சாகம்!

மற்றொரு ரசிகர் அனு வந்துடுச்சு இனிமே கதை ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டு போகும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பிரியா வந்ததும் பாட்டி மாணிக்கம் இருவரும் பழையபடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும். ஆனால் பிரியா பாட்டி அப்படின்னு சொன்னதும் பாட்டி உருகிடுவாங்களே.என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாட்டி இப்போது. ரோஜா மீது காட்டும் பாசம். உண்மையானதா யோசிக்க வேண்டும் ‌ என்று கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவும் கோபியும் ஜெனி வீட்டிற்கு செல்ல, ஜெனி வீட்டிற்கு வருகிறார். அதை பார்த்து செழியன் சந்தோசப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லா சீரியலையும் இப்படி ஒரு பாட்டி இருக்காங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஜெனி உங்க அம்மா அப்பா எப்படி விட்டாங்க என்று கேட்டுள்ளார். ஜெனி வந்துட்டா இனிமே செழியனை கையிலேயே புடிக்க முடியாது என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்கியா அம்மா சக்சஸ்புல் வுமன் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!