‘என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க’ – டாப் சீரியல்களின் சூப்பர் கமெண்ட்ஸ்!

0
'என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க' - டாப் சீரியல்களின் சூப்பர் கமெண்ட்ஸ்!
'என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க' - டாப் சீரியல்களின் சூப்பர் கமெண்ட்ஸ்!
‘என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க’ – டாப் சீரியல்களின் சூப்பர் கமெண்ட்ஸ்!

சின்னத்திரையில் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல்களின் ப்ரோமோ வெளியிடப்பட்டதும், ரசிகர்கள் ப்ரோமோ குறித்த தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதில், சிறந்த கமெண்ட்ஸ்களை இந்த பதிவில் காண்போம்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில் அந்த வாரம் முழுவதும் ஒளிபரப்ப இருக்கும் சீரியலின் காட்சிகள் குறித்து முன்னதாக ப்ரோமோ வெளியிட்டு வந்தனர். பின்னர், அதற்கு இருந்த வரவேற்பை பார்த்து தினசரி கட்சிகளின் ப்ரோமோக்கள் காலையிலேயே வெளியிடப்பட்டு வருகிறது. அதிலும், தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் சமூக ஊடகங்களிலும் ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்ததும் அது குறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கமெண்டுகளுக்கு என்று ரசிகர்களும் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்னைக்கு வண்டியில் செல்லும் போது நடக்கும் கலாட்டாக்கள் ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சந்தோஷத்தை பார்க்க எத்தனை நாள் ஆச்சு.. என்ன ஒன்னு கண்ணனையும் கூட்டிக்கிட்டு போய் இருக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா ஜீவா காம்போ செம.. என்று கூறியுள்ளார்.

தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ரேஷ்மா, சமாதானம் செய்த மதன் – திருமண வீடியோ வைரல்!

மற்றொரு ரசிகர் என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சுற்றுலா போறது எல்லாம் சந்தோஷமா தான் இருக்கும் ஆன அங்க கண்ணனை யாரும் கண்டுக்கவே இல்லையே என்று கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

கோபி ராதிகாவை கையை பிடித்து சமாதானம் செய்வதை ராதிகாவின் அம்மா பார்த்து விடுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கோபிடம் கற்றுக்கொள்ளலாம் என்ன நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராதிகாவுக்கு இந்த ஜென்மத்தில் உண்மை தெரிய போறது இல்லை என்று கூறியுள்ளார்.

ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவின் வெற்றிப் பயணம் – ஏமாற்றம், அவமானத்தை கடந்து சாதித்த கதை!

மேலும் ஒரு ரசிகர் போன வாரம் கோபி பத்தி ராதிகாவுக்கு தெரிஞ்சது… அதுக்கு முன்னாடி கோபி பத்தி அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சது இது ரெண்டுபே பெருசா வெடிக்கலயே ஏன் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறீர்களே டைரக்டர் சார் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு சென்றது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லையே உடனே கோர்ட் சீனுக்க வந்துட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஏன் நீதிபதி ஆச்சரியமா பாக்குறாறு… அவருக்கும் கண்ணம்மாவை தெரியுமோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மா ரோலில் ரோஷ்னியே நடித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதில் ஒருவர் பாரதி வெண்பாவை தவிர வேறு யாரையுமே நம்ப மாட்டாரா என்று கேட்டுள்ளார். மேலும் ஒருவர் நீதிமன்றமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லு என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2:

சரவணனுக்கு சந்தியா படிக்க சொல்லி தருவது போல் ப்ரோமோ காட்சிகள் உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒவ்வொரு மனைவியும் இப்படியே இருந்துட்டா கவலையே இல்ல ஜாலியா இருக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஏதோ இப்ப தான் ரொமான்ஸ் துளிர்விடுது அதுக்கும் அப்பு வச்சிடாதீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது எல்லாத்துக்கும் சந்தியா தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீன சிவகாமி பார்த்த என்னாகும்? என்று கேட்டுள்ளார்.

ரோஜா:

ரோஜா, அர்ஜுன் திருமணத்தின் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மறு மாங்கல்யம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இருக்குறத விஷயத்தை ஒழுக்கமா எடுங்க‌‌ போதும்.. எதிர்பாராத விஷயம் இங்கு யாரும் கேட்கல.. உங்ககிட்ட..என்று கூறியுள்ளார். நாங்க எதிர்பாத்தது மட்டும் தான் அரங்கேறும், எதிர்பாக்காததுன்னு சொல்லி எங்கள ஏமாத்துனது போதும் என்று ஒருவர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படி எதிர்பார்க்க வச்சி ஏமாத்துறது தானே உங்களோட வேலை என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!