‘பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான்’ கலாய்க்கும் ரசிகர் – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான்' கலாய்க்கும் ரசிகர் - ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான்' கலாய்க்கும் ரசிகர் - ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான்’ கலாய்க்கும் ரசிகர் – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

தினசரி சீரியல்களின் ப்ரோமோக்கள், அன்றைய எபிசோடின் முன்னோட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு ரசிகர்கள் அளிக்கும் கமெண்டுகள் சீரியல்களை விட தற்போது அதிக பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரை சீரியல்கள் அனைத்தும் தற்போது வெள்ளித்திரை சினிமாவை மிஞ்சி விடும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மூலம் தினம் தினம் மக்களிடம் சென்று சேருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் சமீப காலமாக பல வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரையை நோக்கி படை எடுத்து வருகின்றனர். சீரியல் மூலம் அந்த அளவிற்கு பிரபலமும்,புகழும் கிடைப்பது இதற்கு மற்றொரு காரணமாகும். சமீப காலமாக சீரியல்களுக்கு வெளியாகும் ப்ரோமோ மற்றும் அதற்கு ரசிகர்களின் கமெண்டுகள் அதிக கவனத்தை பெற்று வருகின்றது.

பாரதி கண்ணம்மா:

கண்ணம்மாவிடம் விவாகரத்து பற்றி சொல்லி, கோர்ட்டில் சந்திப்போம் என்று பாரதி கிளம்புவது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா, சுயமரியாதை சிங்கம் நமக்கு அது இல்லாததால் தான் இன்னும் இந்த சீரியல் பார்த்துக்கிட்டு இருக்கோம் என கூறியுள்ளார்.

“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மஹா சங்கமம் – திங்கள் முதல் 1 மணிநேர ஒளிபரப்பு!

மற்றொரு ரசிகர் பிரிஞ்சாவது தொலைங்கடா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மாட்டிங்க, என்று கூறியுள்ளார். தயவு செஞ்சு இந்த சீரியல்-ல முடிசிருங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பன்ச் டயலாக் பேச வந்த கண்ணம்மா வ இப்படி நோஸ் கட் பன்னிட்டியே பாரதி என்று கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

கோபமாக இருக்கும் கோபி, பாக்கியா கொடுக்கும் தண்ணீரை குடிக்கும் போது மேலே சிந்திக் கொள்கிறார். அதற்கும், பாக்கியாவை தான் திட்டுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெளியில இருக்க கோபத்த வீட்ல தான் காட்டுவாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லாருமே பாக்கியா கிட்ட போங்க அவங்கதான் ஏமார்ந்த ஆளு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்தில் என்ன குழப்பம் நடந்தாலும் அதற்கு பாக்யா தான் காரணம் என்று என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

திருமண அழைப்பிற்கு ஊருக்கு செல்வது பற்றி பேசும் போது மீனா தனியாக செல்ல வேண்டும் என்று சொல்ல, ஜீவா எல்லாரும் சேர்ந்து தான் போக வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான் என் கூறியுளளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!

மற்றொரு ரசிகர் மீனா நடிப்பு அபாரம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் குடுப்பத்துடன் சுற்றுலா போய்ட்டு வாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இங்க நடக்குறது ஜனார்த்தனனுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியலையே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

ரோஜா:

திருமணத்திற்கான அலங்கார ஏற்பாடுகளை ரோஜா செய்வது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது ‌போல ம்ம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வாவ் நாளைக்கு அர்ஜுன் ரோஜா மற்றும் அஸ்வின் பூஜா கல்யாணமா என்று கூறியுள்ளார். இந்த நேரம் பார்த்து கல்பனா இல்லையே எவ்வளவு மிஸ் பண்ணுறோம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த திருமண விழாவில் கண்டிப்பா. கல்பனாம்மா இருந்தால் தான் நல்லாவே இருக்கும் மிஸ் பண்ணாதீங்க ப்ளீஸ் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!