‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!

சின்னத்திரை நடிகர் நடிகை, நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். குறிப்பாக விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் வெளியாக உள்ள ப்ரோமோவில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்கள், ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

சீரியல்கள் அறிவிப்பு:

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் எத்தனை சீரியல்கள் இருந்தாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன.

தமிழக அரசின் முதல் பட்டதாரி சான்றிதழ் – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல. ஒவ்வொரு சீரியலை பார்க்க தனி ரசிகர்கள் வட்டம் உண்டு.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் கண்ணன், ஐஸ்வர்யா தங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதை முல்லை தனது அப்பாவிடம் சொல்லி உதவி கேட்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர் ஒருவர், இனி ஐஸ்வர்யா கலெக்டர் ஆகணும் கண்ணன் பஸ் சர்வீஸ் நடத்தணும் என சூர்ய வம்ச திரைப்பட கதையை பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் பணத்தை திருடிய போது கஷ்டப்பட்டவர்கள் முல்லையும் கதிரும், இப்போது ஆதரவு அளிப்பதும் அவர்களே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த விஷயம் அத்தாச்சிக்கும், மல்லிகாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதா என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வீட்டில் கண்ணனுக்கு தனி ரூம் இல்லை. அதனால் தான் வீட்டை விட்டு அனுப்பி விட்டனர் என கூறியுள்ளார். முல்லை மனசு தங்கம் என ஒருவர் பாராட்டு தெரிவித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்த ரசிகர் ஒருவர், பாரதி கொரோனா டெஸ்ட் எல்லாம் எடுப்பார், ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுக்க மாட்டார் என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் பலரும் கண்ணம்மா சொந்த காலில் நிற்கிறேன் என்று சவால் விட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அவர் கணவரின் உதவியை நாடி வருகிறார் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காம கண்ணம்மாவை சந்தேகப்பட்டால் என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ பார்த்த ரசிகர், கோபி பற்றிய உண்மையை எழில் சொல்ல வேண்டும் என கமெண்ட் செய்துள்ளார். மேலும் ஒரு ரசிகர் கோபி எழிலிடம் மாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் கோபி மற்றும் ராதிகாவுக்கு எதிரான விமர்னங்களை கொடுத்து வருகின்றனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், சந்தியா சரவணன் காதல் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் சின்னையாக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று கமெண்ட் செய்துள்ளார். அதிலும் ஒரு ரசிகர் எவ்வளவு தான் இப்படி நடந்தாலும் பின்னாளில் சண்டைதான் வரும் என்று கூறியுள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியலில் அனு பற்றிய உண்மையை எப்போது தான் கண்டுபிடிப்பீங்க என்று கமெண்ட் செய்துள்ளார். அதில் ஒரு ரசிகர் பெரிய திரையில் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூன் மற்றும் ரோஜா இருவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!