‘முடிவுக்கு வரும் வெண்பாவின் ஆட்டம்’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் ரோஜா வரை இன்றைய ப்ரோமோ!

0
'முடிவுக்கு வரும் வெண்பாவின் ஆட்டம்' - பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் ரோஜா வரை இன்றைய ப்ரோமோ!
'முடிவுக்கு வரும் வெண்பாவின் ஆட்டம்' - பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் ரோஜா வரை இன்றைய ப்ரோமோ!
‘முடிவுக்கு வரும் வெண்பாவின் ஆட்டம்’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் ரோஜா வரை இன்றைய ப்ரோமோ!

சன்டிவியில் ஹிட் சீரியலான ரோஜா முதல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை முக்கிய தொடர்களின் இன்றைய ப்ரோமோ மற்றும் அதற்கு ரசிகர்களின் கமெண்ட்களை பற்றியும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ.. விஜய் டிவி மற்றும் சன்டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் ப்ரோமோக்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பப்பட்டு வருகிறது. ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்து வரும் கமெண்டுகளுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மீனா வீட்டு வேலைகளை மிகவும் சலிப்புடன் செய்வது போல் இன்றைய ப்ரோமோ வெளிவந்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நல்லா இருந்த குடும்பத்துல பிரச்சனை வெடிக்குதா என்று கேட்டு்ள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே குடும்த்தில் பிரச்சனையை உண்டாக்கி பிரிச்சிடுங்க என்று கூறியுள்ளார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – கையும் களவுமாக சிக்கிய கோபி! வெளியான ப்ரோமோ!

மேலும் ஒருவர் நல்லா இருந்த ஒரு சீரியலையும் இப்படி சண்டை போட்டு வழக்கமான சீரயலா மாத்திட்டீங்களே ரைக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போ கலவர பூமியா மாறிக்கிட்டு இருக்கு என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

வெண்பா கொடுத்த போலி மருந்து பற்றி அஞ்சலி அறிந்து கொண்டதாக காட்சிகள் வருகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன பாரதி கண்ணம்மா சீரியல்ல ஒவ்வொரு ட்விட்ஸ்டா வெளிய வருது க்ளைமேக்ஸ்ச நெருங்குதா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வெண்பாவுக்கு அடுத்த ஆப்பு ரெடியா இருக்கு போல என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இனி வெண்பா ஆட்டம் க்ளோஸ் சீரியல் டாப் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அப்படியே அந்த டிஎன்ஏ மேட்டரையும் காதுல போட்டுக்கோங்க கண்ணம்மா என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி:

ராதிகாவுடன் கோபி ஒன்றாக இருப்பதை கோபியின் அப்பா பார்த்து விடுவதை போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே கோபி அப்பாவுக்கு ஸ்டோக் வந்து வாய் பேச முடியாது இல்லைனா சுய நினைவு போய் விடும் திரும்ப நினைவு வருவதற்கு 3 வருஷம் ஆகும் பாவம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் நிறைய பாத்தாச்சி.

விஜய் டிவி சீரியல்களில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகர், நடிகைகள்- இது தான் காரணமா?

நடக்கும்போது பாக்கலாம். கணவுண்ணு சொல்லி காது குத்தவஉம் வாய்ப்பு இருக்கும். என் கூறியுள்ளார். இதை பார்த்து யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. உடனே கோபி நல்லா பாத்தீங்களா அது நான்தான என்று கேட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

ரோஜா:

வழக்கம் போல் ரோஜா பாட்டியிடம் திட்டு வாங்குவது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா பண்ண நல்ல செயல் தான் செண்பகத்துக்கு சந்தோசமா இருக்க போகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியும் ரோஜா அக்கா தான் ஜெய்க்க போறாங்க என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இன்னும் எத்தனை காலம் தான் அனு செண்பகம் ரோஜா என்று இழுத்துக்கொண்டு செல்வார்கள் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா ஜெயிக்கிறது இருக்கட்டும் மதர்ஸ் டே கொண்டாடுறேன் சொல்லி கதை ஏன்டா இழுக்கிறிங்க என கேட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!