விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்ஸ்!!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் சன் டிவி "ரோஜா" சீரியல் வரை - டாப் கமெண்ட்ஸ்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்ஸ்!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி என பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

வெள்ளித்திரை படங்களை போல சின்னத்திரை சீரியல்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும் மக்களின் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல்கள் வாரந்தோறும் TRPயில் இடங்களை பிடித்துள்ளது. 30 நிமிட சீரியல்களை விட இன்றைய எபிசோடில் நடக்கும் திருப்பங்களை பற்றி வெளியாகும் ப்ரோமோக்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் உள்ளனர். அதில் அவர்கள் செய்யும் கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்யடின் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்துவிட்டார் என குடும்பத்தில் இருப்பவர்கள் கதறி அழுவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நேற்று அவங்க பேசிய வசனத்தை வைத்தே கவனித்தேன் இந்த கதாபாத்திரம் நிறைவடையும் என்று.. என பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினர் தடுத்தும் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சரவணன் – இன்றைய எபிசோட்!

மற்றொரு ரசிகர் பாவம் லட்சுமி அம்மா அவங்கள இன்னிமே பாண்டியன் ஸ்டோர்ஸ்ல பாக்கவே முடியாம போச்சே என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அடுத்து இந்த அம்மாவின் தங்கையாக மறுபடியும் என்ட்ரி ஆவாங்க யாரும் அழுகாதீங்க… என பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி பஸ்சில் ஏற்றி விடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆணுக்கு கண்ணீர் வருவது அவ்வளவு எளிதல்ல. மனதை கலங்க வைக்கும் நடிப்பு என சரவணனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் சரவணன் கேரக்டரில் சித்துவின் எதார்த்தமான நடிப்பு அருமை என்று கூறியுள்ளார். மேலும் சந்தியா அப்படியே பிக் பாஸ் 5 க்கு போய்டு மா என ஒரு ரசிகர் கூறிள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சரவணனின் நடிப்பு அருமை என்றே பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், செண்பகம் தான் தன்னுடைய அம்மா என நிரூபிக்க பூஜை செய்கிறார். இறுதியில் ரோஜா மயங்கி விழ செண்பகம் அவரை பிடித்து விடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த நாடகத்தில் எப்போவுமே சாமியை விட சாத்தானுக்கு தான் சக்தி.. இறுதி வெற்றி சாத்தானுக்கே.. என கூறியுள்ளார்.

ஜெனி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

மற்றொரு ரசிகர் செண்பகம் வந்துட்டாங்க இப்போ வைப்பாங்க நம்ம எல்லோருக்கும் ட்விஸ்ட். நாளைக்கு செண்பகம் அம்மா ரோஜா பக்கத்துல வந்ததும் முடியும் செவ்வாய்க்கிழமை தான் செண்பகம் என்ன சொல்வாங்க என்று தெரியவரும் மற்றொரு ரசிகர் கொரானாவும் இந்த சீரியலும் ஒன்னு….. இப்போதைக்கு ஒழியாது….என கூறியுள்ளார். இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்கிட்டாணுங்க பா… என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!