“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் "ரோஜா" வரை - ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், அதில் பிரபலமான ஒரு சில சீரியல்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெறுகின்றனர். அந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் இருக்கிறது.

டாப் கமெண்ட்ஸ்:

டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. காலை முதல் மாலை வரை சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்களை பார்க்க ரசிகர்கள் ஏராளம் உண்டு. என்ன தான் அந்த சீரியல்கள் அரை மணி நேரம் ஒளிபரப்பப்பட்டாலும், இன்றைய எபிசோட் குறித்து எபிசோடிற்கு முன்னாடியே ஒளிபரப்பாகும் ப்ரோமோக்கள் லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது. அதில், ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை நகைச்சுவையாக வெளிப்படுத்துவது ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அம்மாவிற்கு இறுதி சடங்குகள் எல்லாம் செய்வது போல எல்லை மீறி காட்டப்படுகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எந்த ஒரு சீரியலிலும் இப்படி ஒரு சோகத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

“விஜய்க்கும் எனக்கும் பிரச்சனை இருக்கு” – வெளிப்படையாக பேசிய எஸ்.ஏ.சி!

சூப்பர் நடிப்பு அப்படியோ கிராமத்துல நடக்குற உண்மையான சடங்கு மாதிரியே இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் அந்த பாட்டி என்றும், இன்ட்ரஸ்டிங்கான சீரியல் என்று மற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், சௌந்தர்யாவிடம் கண்ணம்மா இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை பற்றி உங்களுக்கு தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்க என சொல்வது போல ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சௌநதர்யாவை மோசமான மாமியார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சௌந்தர்யா தப்பு கணக்கு போட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இப்போ சொல்ல வேண்டி தான ஹேமாதான் உன் பொண்ணுனு ஏன் மறைக்கனும் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த கேள்விக்காவது சீக்கிரமா விடை சொல்லுங்க என்று பதிவிட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி மாசமாக இருப்பதை தெரிந்த பின்னர் பாட்டி பாசமாக இருப்பது போல ப்ரோமோ வெளியானது, இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாட்டிக்கு என்ன ஒரு அன்பு ஜெனி மேல என்று கூறியுள்ளார்.

“பாரதி கண்ணம்மா” பிரபலம் அகிலன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் – ரசிகர்கள் வாழ்த்து!

மற்றொரு ரசிகர் ஒவ்வொரு வீட்டிலும் கர்ப்பிணி பெண்களை இப்படித்தான் பார்த்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் பாட்டி கேரக்டரை பாராட்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், சந்தியா சென்ற பேருந்து விபத்தில் சிக்கி விடுகிறது. அதை தெரிந்த சிவகாமி கதறி அழுவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்ப கூட சிவகாமி சந்தியா பற்றி கண்டுக்கவே இல்லையே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இருக்கும் போது விட்டுவிட்டு இப்போ இழுது புலம்புவது தான் எல்லா நேரத்திலேயும் நடக்குது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கவலைப்பட வேண்டாம் ரெண்டு பேரும் திரும்பி வருவாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிவகாமி ஓவர் ஆக்டிங் என்று கூறியுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், செண்பகத்திற்கு தற்போது ஞாபகம் எதுவும் வரவில்லை. ஆனாலும் சிறிது சிறிதாக வரும் என சொல்லி வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜாவும் சென்பகமும் ஒன்று சேர்ந்ததில் யாருக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். ரோஜா ஆனந்தமாய் தன் அம்மா செண்பகத்தின் கையை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வரும் காட்சி அருமை பிடிச்சிருக்கு என கூறியுள்ளார். கூடிய சீக்கிரத்தில் செண்பகமிற்கு பழசு எல்லாம் ஞாபகம் வரணும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். எங்களுக்கு இது போதும். இந்த எபிசோடு சூப்பர்! இனி என்னவேன நடக்கட்டும். எவ்வளவு நாள் இழுத்து போட்டலும் சந்தோசமா இருப்போம் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!