விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – டாப் சீரியல் கமெண்ட்கள்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' முதல் சன் டிவி 'ரோஜா' வரை - டாப் சீரியல் கமெண்ட்கள்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' முதல் சன் டிவி 'ரோஜா' வரை - டாப் சீரியல் கமெண்ட்கள்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – டாப் சீரியல் கமெண்ட்கள்!

சின்னத்திரையில் சீரியல்களை விட ப்ரோமோ தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வாரத்தின் ப்ரோமோக்களுக்கு ரசிகர்கள் அளித்துள்ள டாப் கமெண்டுகளை இந்த பதிவில் காண்போம்.

ஹிட் சீரியல்கள்:

தமிழகத்தில் சின்னத்திரை சீரியல்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸ், சஸ்பென்ஸ், திரில்லர் என்று எதற்கும் குறைவில்லாமல் உள்ளது. இதனாலேயே சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். வார தொடக்கத்திலேயே இந்த வாரம் முழுவதுமான பொதுவான ப்ரோமா வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சீரியல்கள் எப்படி இருக்க போகிறது என்பதை ப்ரோமோ காட்டி விடுகிறது. இதனால் ப்ரோமோக்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாரத்தின் டாப் சீரியல்களின் ப்ரோமோ மற்றும் ரசிகர்களின் டாப் கமெண்டுகளையும் இந்த பதிவில் காண்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் கதிர் மற்றும் முல்லை வழக்கம் போல் கண்களாலேயே பேசிக் கொள்வது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியல் ரொம்ப போர் அடிக்குது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மிஸ்யூ சித்ரா என்று பதிவிட்டுள்ளர். மேலும் ஒரு ரசிகர் சூப்பர் சீன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீண்டும் ரொமான்ஸா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கதிர் முல்லை ரசிகர்கள் இந்த சீனுக்காக காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியின் வளைகாப்பு விழா காட்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஹேமாவை பார்த்து தனது அத்தையிடம் ஹேமா ஏன் என்ன மாதிரியே இருக்கா என்று கண்ணம்மா கேட்கும் காட்சிகள் ப்ரோமோவில் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வரலாற்றிலேயே இன்றைக்கு தான் அனைத்து ப்ரோமோ நன்றாக இருந்தது…. என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படின்னு கேட்டா எப்படி…. அதை டைரக்டர் கிட்ட தான் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் போனவாரம் லக்ஷ்மி யோட அம்மா யாரு இந்த வாரம் ஹேமாவோட அம்மா யாரு டைரக்டர் மைண்ட் வாய்ஸ் எப்படி எடுத்தாலும் சீரியல் பாக்குறீங்களே நீங்கல்லாம் யாரு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வில்லியா இருந்த அஞ்சலி வில்லிதனமாகவே வெண்பா மூக்கை உடைத்தது சூப்பர்.. என கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

இனியவை பள்ளி விழாவிற்கு டான்ஸ் ப்ராக்டிஸ் செய்து வரும் பாக்கியாவை பார்த்து கோபி சிரிப்பது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் டான்ஸ் என்றும் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்ய அம்மாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன கோபி திட்டுவீங்கனு பார்த்தா ரசிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பரவால்லை கோபி இந்த டான்ஸ பாத்துட்டு கோப்ப்படாம இருக்காரு என்று கருத்துக்களை கூறியுள்ளார்.

ராஜா ராணி 2:

சந்தியாவின் ஹாண்ட்பேக்ல உள்ள விவாகரத்து பத்திரத்தை பார்த்து சரவணன் கோவப்படுவது போல் காட்சிகள் ப்ரோமோவில் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்பாடா இப்பயாவது சரவணன் கேட்டாரே இன்னு ரெண்டு வாரம் ஜவ்வா இழுக்கமா என கேட்டுள்ளார். இனியாவது சரவணனுக்கு உண்மை தெரிஞ்சு பழைய மாதிரி சரவணன் மாருனா தான் இன்னும் சூப்பரா இருக்கும் என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். பல ரசிகர்கள் சந்தியா என் பையன ஏமாத்திட்டா என்று சொல்வதாகவே கமெண்ட் செய்துள்ளனர். ஒரு சில ரசிகர்கள் சரணவன் பழையபடி மாற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ரோஜா:

அனு மற்றும் ரோஜா இருவரும் நேரடியாக சவால் விட்டுக் கொள்வது போல் ரோஜா சீரியலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெளங்கும் எப்படியும் வழக்கம் போல மொக்கை ஆக தான் போகுது, என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா பாவம் சீக்கிரம் அவங்க அம்மா செண்பகத்தை வீட்டுக்கு வர வைக்க கதை கொடுங்கள் அணுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ஏமாற்றுவதே இந்த சீரியலின் பழக்கம் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!