உலகளவில் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் – பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்!

0
உலகளவில் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் - பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்!
உலகளவில் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் - பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்!
உலகளவில் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் – பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்!

இந்த ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்களின் பட்டியலை டைம் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி, SII தலைமை நிர்வாக அதிகாரி பூனாவல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரபலங்கள் பட்டியல்

உலகம் முழுவதும் இருக்கும் அரசியல்வாதிகள், தொழில்துறை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், சமூக சேவகர்கள் போன்ற செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை பிரபல ஆங்கில பத்திரிகையான டைம் வெளியிட்டு வருகிறது. இதற்காக மக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்கும் இந்த பத்திரிக்கை, மக்களிடையே செல்வாக்கு பெற்று முதல் 100 இடங்களை பிடித்துள்ள நபர்களை ஆண்டு தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை டைம் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் முதல் 100 இடங்களில் பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவல்லா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிக்க மக்கள்’ பட்டியலானது, ஐகான்கள், முன்னோடிகள், டைட்டன்ஸ், கலைஞர்கள், தலைவர்கள் மற்றும் புதுமையாளர்கள் என்ற ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!

இதில் 70ஆவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். இதேபோல, இந்திய அரசியலில் உக்கிரத்தின் முகம் என்று விவரிக்கப்பட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 66 ஆவது இடத்தை வகித்துள்ளார். இவர்களுடன் உலகளவில் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்களின் பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜின்பிங், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினரும் இணைந்துள்ளனர்.

மேலும், இஸ்ரேலிய பிரதமர் நாப்தாலி பென்னட், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, அமெரிக்க அரசியல்வாதி லிஸ் செனி, தொலைக்காட்சி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. விளையாட்டு துறைகளை பொருத்தளவு, ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க கால்பந்து கால்பந்து வீரர் டாம் பிராடி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 30,570 பேருக்கு தொற்று! 431 பேர் பலி!

தவிர, பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ், பாடகர் டோலி பார்டன், ஆடை வடிவமைப்பாளர் அரோரா ஜேம்ஸ் போன்றவர்களும், சினிமா துறையில் நடிகர்கள் கேட் வின்ஸ்லெட், ஜேசன் சுடெய்கிஸ், ஸ்கார்லெட் ஜோஹன்சன் மற்றும் ஓமர் சை ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சுவாரஸ்யமாக, தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதரின் பெயரும் டைம் பத்திரிக்கையின் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!