“ரோஜா” சீரியலை பின்னுக்கு தள்ளிய “பாரதி கண்ணம்மா” – இந்த வார டிஆர்பி ரேட்டிங்!

1
"ரோஜா" சீரியலை பின்னுக்கு தள்ளிய "பாரதி கண்ணம்மா" - இந்த வார டிஆர்பி ரேட்டிங்!
“ரோஜா” சீரியலை பின்னுக்கு தள்ளிய “பாரதி கண்ணம்மா” – இந்த வார டிஆர்பி ரேட்டிங்!

தமிழ் சீரியல்களின் இந்த வார ஒட்டுமொத்த டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் “பாரதி கண்ணம்மா” சீரியல் முதல் இடத்தினை தக்க வைத்து “ரோஜா” சீரியலை பின்னுக்கு தள்ளி உள்ளது.

டிஆர்பி ரேட்டிங்:

மக்கள் தற்போதய காலத்தில் சின்னத்திரையில் அதிகம் விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான். இதனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. அந்த வகையில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ பிரபலம் வாங்கிய KTM பைக் – ரசிகர்கள் வாழ்த்து!

இதனால் சீரியல்களுக்குள் டாப் இடத்தை பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும். தற்போது கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான டிஆர்பி விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழக்கம் போலவே சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்துள்ளது. ஆனால், சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் சற்று மாறுதல் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் 10.4 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கு அடுத்த இடத்தில் சன் தொலைக்காட்சியின் டாப் சீரியல் “ரோஜா” 10.25 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. “பாரதி கண்ணம்மா” மற்றும் “ரோஜா” இரண்டு சீரியல்களுக்கும் வெறும் 0.15 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்திற்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டாப் 10 சீரியல்களின் பட்டியல்

 1. பாரதி கண்ணம்மா – 10.4
 2. ரோஜா – 10.25
 3. பாண்டியன் ஸ்டோர்ஸ் – 9.46
 4. கண்ணான கண்ணே – 9.11
 5. பாக்கியலட்சுமி – 9.07
 6. பூவே உனக்காக – 9.06
 7. வானத்தை போல – 8.89
 8. ராஜா ராணி 2 – 8.79
 9. சுந்தரி – 8.02
 10. அன்பே வா – 7.81

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

 1. Indha kandravathi serial ah evanda paakkuraanuga…velai vetti illatha pasanga…frustrating one…worst screen play…they are fooling people…request you all..please dont watch this excrement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!