தமிழகத்தில் நாளை (செப்.29) ‘இந்த’ மாவட்டத்தில் பொது விடுமுறை – வெளியான அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் நாளை (செப்.29) 'இந்த' மாவட்டத்தில் பொது விடுமுறை - வெளியான அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் நாளை (செப்.29) 'இந்த' மாவட்டத்தில் பொது விடுமுறை - வெளியான அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் நாளை (செப்.29) ‘இந்த’ மாவட்டத்தில் பொது விடுமுறை – வெளியான அதிரடி உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் பேரூராட்சியில் 9 வார்டுகளுக்கும் மீண்டும் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இந்த மாவட்டத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதில் 1,2 மற்றும் 11-வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட 3 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதையடுத்து மீதமிருந்த 9 வார்டுகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை – தரவரிசை பட்டியல் வெளியீடு!

இந்த நிலையில் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு, இங்கு நடைபெற்ற தேர்தலானது மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகள், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவில்லை என அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற 3 நபர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முடிவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியாகும் எனவும் மற்ற 9 வார்டுகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வருகிற 29ம் தேதி அன்று இந்த 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தேர்தல் நடைபெற்று முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 1-ம் தேதி அன்று கயத்தாரில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!