தமிழகத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
சென்னையில் நாளை மின் இணைப்பு சரிபார்க்கும் பணி நடைபெறுவதால் எந்தெந்த பகுதிகளுக்கு மின்தடை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் இணைப்பு பகுதிகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என சரிபார்ப்பு செய்யப்படுகிறது. அதிலும், குறிப்பாக தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் மின் துறை ஊழியர்கள் இரவும், பகலுமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், நாளை சென்னையில் உள்ள மின் கம்பங்களில் மின் இணைப்பு பணி செய்யப்பட இருக்கிறது.
TNPSC தமிழ் Exam எழுத போறீங்களா. அப்போ முதல்ல இதை படிங்க.. முழு மார்க் உறுதி!
அதாவது, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி சிட்லம்பாக்கம் 2-வது மற்றும் 3-வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பால விநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு (1 முதல் 7-வது குறுக்குத் தெரு), ஐயப்பா தெரு, எஸ்.பி.ஐ காலனி, காந்தி தெரு (1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெரு), அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரியம் கோட்ட சொற்பொழிவாளர் அறிவித்துள்ளார்.