நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து வங்கி & தபால் அலுவலகங்கள் இயங்காது – இதற்காக தான்?

0
நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து வங்கி & தபால் அலுவலகங்கள் இயங்காது - இதற்காக தான்?
https://tamil.examsdaily.in/pandian-stores-hema-tastes-ramadan-fasting-porridge-viral-video https://tamil.examsdaily.in/banks-closed-for-4-days-from-april-14-to-which-states-here-is-the-holiday-list https://tamil.examsdaily.in/chance-of-rain-with-thunder-and-lightning-in-tamil-nadu-for-next-4-days-chennai-meteorological-center-report https://tamil.examsdaily.in/happy-news-for-chennai-super-kings-fans-the-team-that-won-the-200th-match https://tamil.examsdaily.in/post-office-rs62000-salary-super-job-announcement-applications-welcome https://tamil.examsdaily.in/alia-shines-as-a-wedding-girl-in-baby-shower-viral-makeup-video https://tamil.examsdaily.in/vijay-tv-anchor-archana-daughter-wants-to-marry-shot-answer-by-her-side நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து வங்கி & தபால் அலுவலகங்கள் இயங்காது - இதற்காக தான்?
நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து வங்கி & தபால் அலுவலகங்கள் இயங்காது – இதற்காக தான்?

நாளை (ஏப்ரல்.14) அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு

டாக்டர் பிஆர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று பொது விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படும் பீம்ராவ் அம்பேத்கர் அல்லது பிஆர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளையடுத்து நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பள்ளி மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று – பெற்றோர்கள் அச்சம்!

இது குறித்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் இன்று (ஏப்ரல்.13) வெளியிட்ட அறிவிப்பில், ‘டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, 14 ஏப்ரல் 2022 புதன்கிழமை அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இந்தியா முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற கருவிகள் சட்டம், 1881 இன் பிரிவு 25 இன் கீழ் அதிகாரங்களை செயல்படுத்துவதன் மூலம் விடுமுறை விடப்படும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனுடன் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தபால் நிலையங்கள் தவிர, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளும் நாளை மூடப்பட இருக்கிறது. இருப்பினும் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் மட்டுமே வங்கிகள் திறக்கப்படும். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் இணையதள தகவலின் படி, சில மாநிலங்கள் மகாவீர் ஜெயந்தி, பைசாகி, வைசாகி, தமிழ் புத்தாண்டு தினம், சிரோபா, பிஜூ விழா மற்றும் போஹாக் பிஹு ஆகியவற்றை அனுசரிக்கும் என்பதால் இந்த பண்டிகைகளை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதியன்று குறிப்பிட்ட சில மாநிலங்களில் அனைத்து வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூடப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here