TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – தேர்வாணையம் அறிவிப்பு!

0
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - தேர்வாணையம் அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - தேர்வாணையம் அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – தேர்வாணையம் அறிவிப்பு!

7,382 காலிப் பணியிடங்களை நிரப்ப்புவதற்கான குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி என்பதால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

குரூப் 4 தேர்வு:

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 முதலான தகுதி தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 முதலிய தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. மேலும், மார்ச் 29 ஆம் தேதி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப குரூப்- 4 நடத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இது வரை 13 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குரூப் -4 தேர்வின் மூலமாக 7,382 பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இதில் 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்த தேர்வில் பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு மற்றும் புத்திகூர்மை பகுதிகளில் இருந்து 25 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். மொத்தமாக 200 மதிப்பெண்ணுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறும். தேர்வு எழுத 3 மணி நேரம் வழங்கப்படுகிறது.

மே 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

மேலும், குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி தேதிக்கு தான் பலரும் அவசர அவசரமாக விண்ணப்பிக்க இருப்பதால் சர்வர் முடங்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் உடனே விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்குப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை அறிய விரும்பினால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் சென்று அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!