தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் கோடை விடுமுறை!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - நாளை முதல் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - நாளை முதல் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் கோடை விடுமுறை!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறவில்லை, இருப்பினும் நடப்பு ஆண்டு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதை உறுதி செய்யும் விதமாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலஅட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் (ரிவிஷன்) தேர்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது.

ஆப்ரேஷனை தொடங்கிய பாரதி, திடீரென மாறிய வானிலை – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

இதையடுத்து 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் பள்ளிக்கு வரத் தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் காலையில் தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு செல்கின்றனர். இன்று (13-ந்தேதி) கடைசி வேலை நாளாகும். இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை (14-ந்தேதி ) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறையை கொண்டாடுவதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here