அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கிய அலுவலகத்திற்கு நாளை ஒரு நாள் விடுமுறை – வெளியான அறிவிப்பு!

0
அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கிய அலுவலகத்திற்கு நாளை ஒரு நாள் விடுமுறை - வெளியான அறிவிப்பு!
அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கிய அலுவலகத்திற்கு நாளை ஒரு நாள் விடுமுறை – வெளியான அறிவிப்பு!

தமிழகத்தில் அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையானது நெருங்கி கொண்டிருப்பதால் நாளை ஒரு நாள் மட்டும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு விடுமுறை என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

நாளை விடுமுறை:

தமிழகத்தில் பதிவுத்துறையில் வருவாயை அதிகப்படுத்தும் விதமாக பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 என கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. மேலும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள வசதியாக வார விடுமுறை நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 100 சார்பதிவாளர் அலுவலகங்களை தேர்வு செய்து அனைத்து சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் அந்நாளில் பதிவு மேற்கொள்ள கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து 100 அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கி கொண்டிருக்கிறது. இதன் மூலமாக அரசுக்கு வருவாயானது கடந்த 2020ம் ஆண்டை விட அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டு மட்டும் பதிவுத்துறை மூலமாக 13,913.65 கோடி ரூபாய் வருவையாக கிடைத்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு கிடைத்த வருவாயை விட 3270.57 கோடி ரூபாய் அதிகமாகும்.

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதங்கள் அமல்! விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையானது நெருங்கி கொண்டிருப்பதால் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கி கொண்டிருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அரசு தற்போது நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கி கொண்டிருக்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மற்ற சனிக்கிழமைகளில் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!