தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனால் பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தமிழக முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வருகிற 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன் பின்பு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி பொது விடுமுறை – அரசுக்கு வலியுறுத்தல்!

இந்த தேர்தல் முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறும். இவை அனைத்தும் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும். அதன்படி நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. அத்துடன் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வருகிற 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19ம் தேதி அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இந்த விதியை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Officeல் ரூ.63,200 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மேலும் இது குறித்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மேலாண் இயக்குநர் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்களுக்கும் 19ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறை வாக்களிப்பு ஆரம்ப நேரத்திலிருந்து முடியும் நேரம் வரையில் மட்டுமே பொருந்தும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் ஒரு பொது சேவை நிறுவனம் என்பதால் வாக்குரிமை உள்ள அனைவரும் அந்தந்த கிளை மேலாளரிடம் முன்கூட்டியே தெரிவித்து செல்ல வேண்டும். அத்துடன் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும். போக்குவரத்து பொது சேவைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here